Followers

Powered by Blogger.

சர்க்கரை நோய் நீங்க

Posted by ss Saturday, July 27, 2013


மூலவர்:வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)
  உற்சவர்:-
  அம்மன்/தாயார்:அழகிய நாயகி (சவுந்தர நாயகி)
  தல விருட்சம்:நந்தியாவர்த்தம்
  தீர்த்தம்:சூரிய, சந்திர தீர்த்தங்கள்
  ஆகமம்/பூஜை :காமிய ஆகமம்
  பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்:திருவெண்ணியூர், கோயில்வெண்ணி
  ஊர்:கோயில்வெண்ணி
  மாவட்டம்:திருவாரூர்
  மாநிலம்:தமிழ்நாடு



[Image1]
அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

காற்றினைக் கனலைக் கதிர்மாமணி நீற்றினை நினைப்பார் வினைநீக்கிடும் கூற்றினை யுதைத்திட்ட குணமுடை வீற்றினைநெரு நற்கண்ட வெண்ணியே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 102வது தலம்.
 திருவிழா:
 
நவராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
 
 தல சிறப்பு:
 
பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி போஸ்ட்- 614403, நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91- 98422 94416
 
 பொது தகவல்:
கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம் . மூன்று நிலைராஜககோயிலின் உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன.

பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை. ஆகியோர் உள்ளனர். கருவறை அகழி அமைப்புடையது.
 http://temple.dinamalar.com/New.php?id=310


0 comments

Post a Comment

Blog Archive

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates