Followers

Powered by Blogger.
Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

தீபப் பயிற்சி-பதிவு - 1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
உலகின் பல்வேறு இடங்களில் தீபப் பயிற்சி தவத்தின் ஆரம்ப நிலை பயிற்சியாக இன்றும் செய்யப் பட்டு வருகிறது .தீபப் பயிற்சி விளக்கு பயிற்சி என்றும் அழைக்கப் படுகிறது.
தீபப் பயிற்சி எண்ணெய் ஊற்றப் பட்ட விளக்கு வைத்தோ ,ஏற்றி வைக்கப் பட்ட மெழுகுவர்த்தி வைத்தோ தீபப் பயிற்சி செய்யப் படுகிறது.
தீபப் பயிற்சி உடலிலுள்ள ஜீவகாந்தத்தை பெருக்கும் பயிற்சியாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டு வருகிறது.
ஆனால் ,தீபப்பயிற்சி மூலம் பல்வேறு சக்திகளைப் பெறமுடியும் என்பதையும்,  தீபப் பயிற்சி மூலம் பெற்ற சக்திகளை எளிதாக சோதனை செய்தும் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தீபப் பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்:
1 ஜீவகாந்த சக்தி பெருகுகிறது.
2 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது.
3 ஸ்துhல உடலிலிருந்து சூட்சும உடல் தனியாகப் பிரியும் தன்மையைப் பெறுகிறது.
4 சூட்சும உடல் ஆன்ம ஒளியைப் பெறுகிறது.
5 சூட்சும உடல் தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது.
தீபப் பயிற்சி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
1 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
2 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்.
3 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் கண்டிப்பாக செய்யக் கூடாது.
4 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யும் பொழுது தீய ஆவிகளின் தொற்றுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் தீபப் பயிற்சியை செய்ய வேண்டும்.  அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது.
5 தீபப் பயிற்சி செய்வதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு மந்திரம் ,திக்கு கட்டு மந்திரம் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்   .
தீபப் பயிற்சி செய்வதற்கு தேவைப்படுபவை:
1 அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
2 சாதாரண விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
3 விளக்கில் எண்ணெய் வகைகளாக நெய், விளக்கு எண்ணெய் ,கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
4 மண்ணெண்ணெய் நிரப்பப் பட்ட விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.
5 மெழுகுவர்த்தியை பயன்படுத்த வேண்டாம் .
தீபப் பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:
முதல் நிலை -1
a ) தீபப் பயிற்சியில் ஆரம்ப நிலையில்   உள்ளவர்கள் செய்யவேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து மூன்று நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும்.
5 பிறகு கண்களை மூடி  உள்ளே பார்க்க வேண்டும்.
6 மேலே கண்ட செயல்முறையைப் போலவே தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
b ) தீபப் பயிற்சியில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 தீபத்தை தொடர்ந்து 15 நிமிடங்கள் (அல்லது) 20 நிமிடங்கள் வரை பார்க்க வேண்டும்.
5 தீபத்தில் பல்வேறு நிறங்கள் தெரிவதைப் பார்க்க முடியும்.
6 பச்சை, சிகப்பு என்று பல்வேறு பட்ட நிறங்களை தீபப் பயிற்சியில் நாம் வளர்ச்சி அடையும் பொழுது நாம் காணக் கூடிய நிறங்களாகும்.
தீபப் பயிற்சியின் முதல்நிலையில் பல்வேறு வகையான நிறங்கள் தெரிந்த பிறகு அடுத்து அடுத்து தீபத்தில் தெரியும் விஷயங்கள் தீபப் பயிற்சியில் சூட்சும ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”
 
                                       தீபப் பயிற்சி-பதிவு - 2
“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இரண்டாம் நிலை - 2
தீபப் பயிற்சியில் முதல் நிலை முடித்தவர்கள் ,இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்யலாம்.
இங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .முதல் நிலை முடித்தவர்கள் இரண்டாம் நிலை ஆரம்பித்து விட்டால் ,முதல் நிலை பயிற்சியான எண்ணெய் ஊற்றிய விளக்கைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை.
இரண்டாம் நிலையில் என்ன பயிற்சியை செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறதோ ,அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் போதும்.
இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்வதற்கு நமக்கு தேவைப்படுபவை : 
1 ஒரு சிறிய நைட் பல்பு (இரவில் உறங்கும் பொழுது பயன் படுத்தும் பல்பு)
2 அந்த நைட் பல்பு ஜீரோ வாட்ஸ் பல்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நைட் பல்பை எரிய வைத்தால் முழுவதும் மஞ்சள் நிறமாக எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சள் நிற நைட் பல்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
4 நைட் பல்பின் ஒளி நம் கண்களை கூசச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை கீழ்க்கண்டவாறு செய்ய வேண்டும் :
1 நாம் உட்காராமல் நேராக நின்று கொள்ள வேண்டும்.
2 நைட் பல்பு கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நைட் பல்பை எரிய வைத்து கண்களால் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
4 நைட் பல்பை தொடர்ந்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை பார்க்க வேண்டும்.
5 நைட் பல்பில் தெரியும் மஞ்சள் நிற ஒளி படிப்படியாக மாற்றம் அடைந்து பல்வேறு நிறங்கள் தெரிவதை பார்க்கலாம்.
6 முழுவதும் மஞ்சள் நிறமாக தெரியும் ஒளி படிப்படியாக சிகப்பு ,பச்சை என்று நைட் பல்பு முழுவதும் ஒளியின் நிறம் மாற்றம் அடைவதை நாம் பார்க்கலாம்.
7 நிறம் மாற்றம் அடைந்த பிறகு கிடைக்கும் பலன்கள் தான் சூட்சும ரகசியங்கள் என்பதை தீபப் பயிற்சி செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .
8 இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர அடுத்து, அடுத்து நமக்கு கிடைக்கும் பலன்களை பயிற்சியை செய்பவர்களே தெரிந்து கொள்ளலாம்.
9 பயிற்சி தொடர்ந்து செய்து அதன் பலனை சுவைத்தவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வார்கள்.
சோதனை முறை
தீபப்பயிற்சியின் இரண்டு நிலைகளையும் குறைந்தது ஒரு வருடம் செய்தவர்கள் கீழே சொல்லப்பட்ட சோதனை முறையை செய்து பார்த்தால் தங்களிடம் உள்ள சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்.
முதல் சோதனை முறை
1 காற்றால் நிரப்பப் பட்ட  ஊதிய பலுhன் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் .
2 பலுhனை தரையில் வைத்து விட்டு நாமும் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும் .
3 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும்படி நாம் அமர்ந்திருக்கும் அறையில் உள்ள கதவுகள் அனைத்தையும் மூடிக்  கொள்ள வேண்டும்.
4 அறைக்குள் காற்று முழுவதுமாக வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
5 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும் படியாக நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.
6 பலுhன் நாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தொலைவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
7 நாம் பலுhனை சிறிது நேரம்  ஊற்று நோக்கியபடி மனதிற்குள் தன்னை நோக்கி பலுhன் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே பலுhனைப் பார்க்க வேண்டும்.
               
          “””””வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்
                    துhண்டும் உருவும் எனதாக வேண்டும்”””
8 அவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது பலுhனை சிறிது அசையத் தொடங்கும் சிறிது ,சிறிதாக நகர்ந்து உருண்டு உருண்டு நகரத் தொடங்கும்.
9 உருண்டு ,உருண்டு நகர்ந்து கொண்டே வந்து நம் அருகே வந்து விடும்.
அப்படி வந்து விட்டால் உங்களிடம் சக்தி வளர்ந்து இருக்கிறது என்று பொருள்
இரண்டாவது சோதனை முறை
1 ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் .அதை மேசையின் மேல் வைக்க வேண்டும்.
2 மேசையின் மேல் அகல் விளக்கை வைத்த பிறகு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்ற வேண்டும்.
3 விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் நம் கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 நாம் தரையில் அமர்ந்து கொண்டு நம் கண்களுக்கு நேராக விளக்கின் தீபம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
5 சிறிது நேரம் தீபத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும்.
6 பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து தீபத்தின் முன் வைக்க வேண்டும்.
7 சிறிது நேரம் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை தொடர்ந்து பார்த்து மேலே சொன்ன மந்திரத்தை
         “””” வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்
                 துhண்டும் உருவும் எனதாக வேண்டும்””””
  என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வரவேண்டும்
8 எலுமிச்சை பழம் மேசையில் மெதுவாக அசைய ஆரம்பிக்கும்.
9 பிறகு உருள ஆரம்பிக்கும்.
10 மேசையிலிருந்து உருண்டு வந்து நம்முடைய மடியில் வந்து விழும்.
மேலே சொல்லப்பட்ட பலன் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு ஆகர்ஷன சக்தி வந்து விட்டது என்று பொருள்.
 அதாவது நீங்கள் விருப்பப் பட்ட பொருள் எந்த இடத்தில் இருந்தாலும் ,எந்த நாட்டில் இருந்தாலும் ,அந்தப் பொருள் உங்களைத் தேடி வரும்.
அந்த பொருள் உயிருள்ள பொருளாக இருந்தாலும் ,உயிரற்ற பொருளாக இருந்தாலும் உங்களைத் தேடி வரும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ,அறிந்து கொள்ள வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட பலன் மட்டுமில்லை, இதை விட மேலும் பல பலன்களும் சக்திகளும் தீபப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் .

தீபப்பயிற்சியை செய்பவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து செய்து அதன் பலன்களை அனுபவித்து அதை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் எனறு கேட்டுக் கொள்கிறேன்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                     போற்றினேன் தீபப்பயிற்சி யுந்தான்முற்றே “”
 
படித்த இடம் :http://kbalagangadharan.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
 


                              கரும்புள்ளி பயிற்சி


கரும்புள்ளி பயிற்சி மிக குறைந்த எண்ணிக்கையுடைய மனிதர்களால் மட்டுமே செய்யப்படுகிறது.
இப்பயிற்சியில் நம்முடைய உயிராற்றல் சக்தி செலவாகிறது

இப்பயிற்சி ஒருவரை அவருடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க வைப்பதற்காகவும் மற்றவர்களை வைத்து தன்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் மற்றவர்களை தனக்கு அடிமையாக வேலை வாங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது

இது பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற செயல்கள் செய்பவர்களின் ஆரம்ப நிலை பயிற்சியாக இருந்து வருகிறது மனிதர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற பலன்கள் உடனே கிடைத்து விடுகிறது

இந்த பயிற்சியை செய்பவர்கள் சக்தி அவர்கள் உள்ளேயே இருக்கும் வெளியே சென்று இயங்காது கரும்புள்ளி பயிற்சி மூலம் கிடைத்த சக்தியை சோதனை செய்ய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன


கரும்புள்ளி பயிற்சியின் ரகசியத்தை கீழ்க்கண்டவாறு சொல்லலாம்
மந்திரம் என்பது கரும்புள்ளி பயிற்சி அட்டை
யந்திரம் என்பது பயிற்சி செய்பவர்
தந்திரம் என்பது தான் சூட்சுமம்



கரும்புள்ளி பயிற்சி செய்வதால் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுகிறது
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் உடலில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் மனது எப்பொழுதும் வருத்தமுடன் இருப்பது போலவே தோன்றும் கவலையாக இருப்பதற்குரிய அறிகுறிகள் முகத்தில் தோன்றும்

கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் சாலையில் நடந்து செல்லும் போதும் வீட்டில் சில நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் அடிக்கடி தவறி விழுந்து விடுவார்கள் சிறுசிறு விபத்துக்கள் கூட ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு 

குடும்பத்தில் இருந்து கொண்டு இந்த பயிற்சியை செய்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது



கரும்புள்ளி அட்டை செய்யும் விதம்
1 பாஸ்போர்ட் கார்ட் அளவு உள்ள ஒரு வௌளை அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்
2 அதன் மையத்தில் ஒரு 25 பைசா வைத்து அதனைச் சுற்றி ஒரு வட்டம் வரைய வேண்டும்
3 வரையப்பட்ட அந்த 25 பைசா வட்டத்திற்குள் கருப்பு நிற மையினால் வர்ணம் அடிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி செய்வதற்கு உரிய கரும்புள்ளி அட்டை தயாராகி விட்டது


கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
1 கரும்புள்ளி பயிற்சியை அதிகாலை 03.00 மணியிலிருந்து 08.00 மணிக்குள் செய்ய வேண்டும்
2 அதிகாலை 03.00 மணியிலிருந்து 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்
3 அதிகாலை 08.00 மணிக்கு மேல் கண்டிப்பாக கரும்புள்ளி பயிற்சி செய்யக் கூடாது
4 கரும்புள்ளி பயிற்சியை தனியாக அமர்ந்து தனி அறைக்குள் தான் செய்ய வேண்டும்
5 கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும்
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு உடல்கட்டு போன்ற கட்டு மந்திரங்களை தன்னைச் சுற்றி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்



கரும்புள்ளி பயிற்சி முறை 1
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 2 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை மட்டுமே பார்க்க வேண்டும்
4 பிறகு கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும்
5 மேற்கண்ட செயல்முறையை மூன்று முறை அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


கரும்புள்ளி பயிற்சி முறை 2
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 தியானம் தெரிந்தவர்கள் நெற்றிக்கண்ணில் தனது நினைவை செலுத்த வேண்டும் நெற்றிக் கண்ணில் உறுத்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும்
4 பிறகு கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 20 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை பார்க்க வேண்டும்
5 கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும் அவ்வாறு கவனிக்கும் போது நெற்றிக்கண்ணில் மனதை நிறுத்தி உள்ளே கவனிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக செய்யப்பட்டாலும் அதில் உள்ள சிறந்த இரண்டு முறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவர நமது உடலில் சக்தி படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கும் வளர்ந்த சக்தியை ஒவ்வொரு படிநிலையிலும் பரிசோதனை செய்ய சில செயல்முறைகள் உள்ளன
முதல் படிநிலையில் அடைந்த சக்தியை சோதனை செய்ய கீழ்க்கண்ட பரிசோதனையை செய்து பார்க்கலாம்


சோதனை முறை
நாம் பேருந்திலோ இரயிலிலோ பயணம் செய்கிறோம் அவ்வாறு பயணம் செய்யும் போது நமக்கு முன்னால் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ள வேண்டும்

அவருடைய முதுகு பக்கத்தை தொடர்ந்து பார்த்து நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து நமது மனதுக்குள் சொல்லி வர வேண்டும் அவ்வாறு தொடர்ந்து சொல்லி வரும்பொழுது அவர் திரும்பி நம்மை பார்ப்பார்

இச் சோதனை முதல் படிநிலையில் வளர்ந்த சக்தியை அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது

இதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளுக்கான பல்வேறு சோதனைகள் உள்ளன
கரும்புள்ளி பயிற்சி முறை தவறானவர்களால் தவறான காரியத்திற்கு பயன்படுத்தப்படுவதால்மற்ற சோதனை முறைகள் மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது

மனித இனம் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி முறைகள் தவறாக பயன் படுத்தப் பட்ட காரணத்தால் பல்வேறு பயிற்சி முறைகள் மறைபொருளாக வைக்கப் பட்டிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்

அறிந்து கொண்ட பயிற்சி முறைகளை நல்ல காரியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம்.

படித்த  இடம் :http://kbalagangadharan.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

    ஸ்ரீ பாலா மந்திரம்



             மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட

குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி

முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட

தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக

முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்

என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியாரின்

பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது  (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-       


1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-


ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று சொல்லுவது சிறந்தது.

ஐம்  - என்ற பீஜம்  வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம்  - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக  வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

                     இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.      


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-


ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-


ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||


முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

                                 வாழ்க வையகம்|வாழ்க வளமுடன்||


படித்த இடம் :http://sribalatripurasundarisiddarpeedam.blogspot.in/2013/07/blog-post_6595.html

ஓம் சிவ சிவ ஓம் - செபிக்கும் முறை




“ஓம் சிவ சிவ ஓம்” செபிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:
ஒரு மஞ்சள் துண்டு, மஞ்சள் நிற வேட்டி, இரண்டு 5 முக ருத்ராட்சங்கள், இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள், நாட்டு சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு

தொடங்க வேண்டிய காலம்:
அமாவாசை திருநாள் – குரு ஓரை

தொடங்க வேண்டிய இடம்:
பாடல் பெற்ற சிவத்தலம் அல்லது ஜீவ சமாதி அல்லது பசு கட்டப்பட்டிருக்கும் தொழுவம் அல்லது உயரிய மலைக்கோவில் அல்லது நீர்நிலைகளுக்கு அருகே உள்ள இடம் அல்லது வீட்டின் பூசையறை

தொடங்க வேண்டிய முறை:


1.    
மஞ்சள் வேட்டியை இடுப்பில் தொப்புள் தெரியாத அளவிற்கு கட்டிக் கொள்ளவும்.  மஞ்சள் துண்டை தரையில் விரித்து அதில் அமரவும்.
2.    
இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றி அதன் முன்னர் எலுமிச்சைப் பழச்சாறு வைக்கவும்.
3.    
முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கவும். (உதாரணமாக ஓம் ரேணுகா பரமேஸ்வரியை நமஹ – 1 முறை)
4.    
இரண்டாவதாக விநாயகரை வணங்கவும். (ஓம் கம் கணபதயே நமஹ – 1 முறை)
5.    
மூன்றாவதாக உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கவும். (உதாரணமாக ஓம் மஹா முனீஸ்வராய நமஹ – 1 முறை)
6.    
பின்பு “ஓம் தக்ஷிணாமூர்த்தயே நமஹ” என 108 முறை செபிக்கவும்.
7.    
பின்பு “ஓம் சிவ சிவ ஓம்” என்ற சிவமந்திரத்தை முதலில் ஒரு வாரம் வரையில் 10 நிமிடங்கள் இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வீதம் அடக்கிக் கொண்டு செபிக்கவும்.  ஒவ்வொரு வாரமும் 10 நிமிடங்கள் அதிகரித்துக் கொண்டே சென்று கடைசியாக 60 நிமிடங்கள் அதாவது 1 மணி நேரம் செபிக்கவும்
.
8.    
பின்பு “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என 108 முறை செபிக்கவும்.
9.    
கடைசியாக பின்வரும் சித்தர் துதியை செபித்து முடிக்கவும்.
·        ஓம் அருணாசலாய நமஹ
·        ஓம் காகபுசுண்ட தேவாய நமஹ
·        ஓம் அகத்தீசாய நமஹ
·        ஓம் நந்தீசாய நமஹ
·        ஓம் போக சித்தாய நமஹ
·        ஓம் கோரக்க தேவாய நமஹ
·        ஓம் புலிப்பாணி தேவாய நமஹ
·        ஓம் கருவூர் தேவாய நமஹ
·        ஓம் ராமலிங்க தேவாய நமஹ
10.  
கடைசியாக எலுமிச்சைப்பழச்சாறை குடிக்கவும்.


சாவு தீட்டு போன்ற காரியங்களை விலக்கவும்.  சாவிற்கு சென்று வந்தால் 5 நாட்கள் தீட்டு உண்டு.  நெருங்கிய ரத்த உறவாக இருப்பின் 30 நாட்கள் தீட்டு உண்டு.  பிள்ளைப்பேறு தீட்டு 40 நாட்கள் உண்டு.  அசைவம் சாப்பிட்டு விட்டால் 5 நாட்கள் தீட்டு உண்டு.

அவசியம் தீட்டுக்காரியங்களில் கலந்து கொள்ள நேரிட்டால் மேற்கண்ட நாட்கள் வரை மந்திர செபம் செய்யக்கூடாது.

மந்திர செபம் செய்ய செய்ய நமது கர்மவினைகள் அடியோடு அழிய ஆரம்பிக்கும்.  மந்திர செபம் 1,00,000 அளவை எட்டும் போது நீங்கள் ஒரு அசாதாரணமான மனிதர் என்பதை உணருவீர்கள்.  தொடர்ந்து செபம் செய்ய இயலாமல் போவதுமுண்டு.  அதற்காக வருந்த வேண்டாம்.  மீண்டும் தொடர்ந்து செபிக்கவும்.  தினமும் ஒரு மணி நேரம் செபிப்பவர்களுக்கு அருட்காட்சிகள் காண கிடைக்கும்.  மகான்கள், முனிவர்கள், சித்தர்கள் இவர்களின் அருளாசி கிட்டும்.  கர்மவினைகள் தீரும்.  நிம்மதியான வாழ்வு கிட்டும்.  “ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்கும்.


இந்த மந்திர செபத்தில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பைரவர் மந்திரங்கள் செபிக்கப்படவேண்டும்.  அப்போது தான் சிவ வழிபாடு முழுமை பெறும்.  சிவ வழிபாட்டில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பைரவரின் பங்கு பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஆதிரை நாயகா போற்றி…!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்
 

தியானம்

Posted by ss Saturday, January 11, 2014 0 comments

எளிய தியான முறை
1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

 2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

 3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

 4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

 5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

 6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

 7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

 8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

 9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.


 மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும். தேவையான அளவு தியான முறைகளைச் சொல்லி விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். 

படித்த இடம் :http://enganeshan.blogspot.in/2010/08/42.html

தியான யுக்திகள்


தியான யுக்தி – 1
சோகம் – மிக சிறந்த தருணம்
சோகம் வரும் கணம் ஒரு ஆழ்ந்த புரிதலுக்கான கணமாக மாறக்கூடும் ஏனெனில் ஏதோ ஒன்று உன் இதய ஆழத்தை தொட்டுள்ளது. இப்போது நேரத்தை வீணாக்காதே. அதன் மேல் தியானம் செய். அதை ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார். வெறுமனே கோபமாக இருக்காதே. வெறுமனே சோகமாக இருக்காதே. அது தியானம் செய்வதற்கான மிக அற்புதமான தருணமாகும்.
தியான யுக்தி - 2
திரைபடமாக அனுபவி
நீ மனதின் திரைபடத்தை முழுமையாக அனுபவிக்கலாம். பல்வேறு அற்புதமான திரைபடங்கள் திரையில் ஓடும், நீ வெறுமனே பார்க்கலாம். எந்த படமும் இவ்வளவு அற்புதமான நாடகமாகவோ, ஆர்வமூட்டுவதாகவோ இருக்காது. – ஆனால் நீ ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.
தியான யுக்தி - 3
இரண்டுபட்டவனல்ல
எப்போதெல்லாம் நீ கோபமடைகிறாயோ, உனது நண்பன் அல்லது உனது மனைவி அல்லது கணவன் என யார்மீது கோபம் வந்தாலும் - அது மிகச் சிறிய விஷயமாக இருக்கும், ஒரு தினகாலண்டரில் இருந்து தேதியை கிழிக்கும் விஷயமாக கூட இருக்கலாம் – சேர்ந்து வைத்திருக்கும் கோபம் வெறுப்பு வெளிவரும் – இதை நீ எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறாயா – எப்போதெல்லாம் இப்படி நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இயந்திரதனமாக இல்லாமல் தன்னுணர்வோடு இரண்டுபட்டவனல்ல என்று சொல். உடனடியாக நீ உன் இதயத்தின் உள்ளே தீடீரென ஒரு தளர்வு நிலையை உணர்வாய்.
இரண்டுபட்டவனல்ல என்று சொல், அப்போது அங்கே தேர்ந்தெடுக்க எதுவுமில்லை, தேர்வு என்பதே இல்லை, விரும்பவோ, வெறுக்கவோ எதுவுமில்லை. பின் எல்லாமும் சரியாகிவிடும், நீ எல்லாவற்றையும் அரவணைக்கலாம். பின் வாழ்க்கை உன்னை எங்கே கொண்டு சென்றாலும் சரி, நீ செல்லலாம். வாழ்விடம் நீ இணைப்புணர்வு கொள்வாய்.
தியான யுக்தி - 4
ஆனந்தத்தை ஈர்த்துக் கொள்
நீ என்ன செய்தாலும் அது ஆனந்தத்தை உனக்குத் தருமா என்பதில் தெளிவோடு இரு. அது ஆனந்தத்தை கொண்டு வராது என்றால் அதை விட்டுவிடு, அதை செய்யாதே. அது உனக்கு துன்பத்தை தரும் என்பதை உன்னால் பார்க்க முடிந்தால் அதை மறந்து விடு. நேரத்தை வீணடிக்காதே. கடந்த காலத்தில் அதன் மூலம் நீ துன்பப்பட்டாய் என்பது உனக்கு தெரிந்தால், என்றாவது ஒருநாள் அது சந்தோஷத்தை கொண்டுவரும் என்று நம்பிக்கை கொள்ளாதே. அது கொண்டு வராது.
ஒரு சிறிதளவு சந்தோஷத்தை அது கொடுத்தால் கூட அதை அறிகுறியாக எடுத்துக் கொள். அதனுள் ஆழமாக செல், அதை மறுபடி மறுபடி செய், அதை மேலும் மேலும் அதிகமான அளவில் செய், அதன் ஓட்டத்துடன் செல். எந்த வாய்ப்பையும் தவற விடாதே. ஒவ்வொருவருக்கும் சிறிய அளவிலான சந்தோஷம் நிகழும், அதை கொண்டாடு. பின் அது மேலும் மேலும் அதிக அளவில் நிகழ ஆரம்பிக்கும். நீ உன்னுள் சந்தோஷத்தை ஈர்க்கக்கூடிய மின்காந்த சக்தியை உருவாக்கிக் கொள். நீ ஒரு நேர்மறை சக்தி கொண்ட காந்தமாக மாறு.
தியான யுக்தி - 5
பேச்சை நிறுத்து.....உனது அன்பை வெளிப்படுத்து
எப்போதெல்லாம் நன்றாக உணர்கிறாயோ, உணரு. அங்கு மனதையோ, மொழியையோ கொண்டுவந்து அதை ஆராய்ச்சி செய்யாதே. செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு எந்த அடையாளமும் தேவையில்லை. ஏனெனில் எந்த அடையாளமும் உண்மையில்லை. நன்றாக இருப்பதாக உணரும் அந்த உணர்வு அழிவற்றது. நீ அதை நல்லது என குறிப்பிடும்போது நீ அதை சாதாரணமானதாக மாற்றி விட்டாய். யாரிடமாவது நீ நேசத்தை உணர்ந்தால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லும்போது அதன் புனிதத்தை குறைத்து விட்டாய். நீ அதை ஏற்கனவே கெடுத்து விட்டாய், புரிகிறதா? இந்த வார்த்தை குலைத்துவிடுகிறது. நீ உனது முழு இருப்பின் மூலம் அதை காட்டு. அதை அனுபவி. மற்றவர் அதை உணரட்டும்..... ஆனால் அதைப்பற்றி எதுவும் சொல்லாதே. 

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates