Followers

Powered by Blogger.

கண்ணாடிப் பயிற்சி

Posted by ss Sunday, January 19, 2014 0 comments

  கண்ணாடிப் பயிற்சி


ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவ முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை

இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வருகிறது.


கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச்  சிறந்த தவமுறை. கண்ணாடிப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்

அவருக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,............

1.ஆன்மா விழித்துக் கொள்கிறது

2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது

3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப் பெறுகிறது

மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான  ஒரு பாலமாக கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது.

கண்ணாடிப் பயிற்சி முறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்று சொல்லலாம்.

சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது.


இதனை இன்னும் சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம். சூக்கும உடல் விழிப்புற்று, கரண உடல் ஜோதி மயமாகிறது

கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும் திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்ற என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லை

கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்

 
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி  ஒன்றே கால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்

2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமர வேண்டும்

3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்

4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒரு துணியால் மூடி மறைத்து வைத்து விட வேண்டும்

5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல் கட்டு திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டு கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்

6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரை செய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்

கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவித நிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில் ஒரு சில  கண்ணாடிப் பயிற்சி முறைகளைப் பார்ப்போம்





கண்ணாடிப் பயிற்சி முறை 1


1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச்
செய்ய வேண்டும்

2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்

3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்

4.பிறகு கண்களை  மூடி உள்ளே பார்க்க வேண்டும்

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்




கண்ணாடிப் பயிற்சி முறை 2


1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்

2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்

3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்

4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்



கண்ணாடிப் பயிற்சி முறை 3

1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப்  பார்த்துச் செய்ய வேண்டும்

2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்

3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்

4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்

இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்தி வந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.



கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்

கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும்  இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்


கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்


இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ,

சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;

கண்ணாடி என்பது யந்திரம் ;

தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வியம் நமக்குத் தெரிந்து விடும்.



கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ

கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்து வந்தால் பலன் தெரியும்


நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம் பார்த்து விட்டு வைத்து விட வேண்டும்


தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவை வேறு யாரும் பார்க்காதவாறு மறைவாக வைத்திருக்க வேண்டும்

எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு போட்டோவை வைத்து விட வேண்டும்

இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம் முடிந்தவுடன் அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டு போட்டோவைப் பார்க்க வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள் எல்லாம் குறைவே. கண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கிங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள் அரிய பொக்கிங்கள் உங்களுக்கு கிடைக்கும்

படித்த இடம் :http://kbalagangadharan.blogspot.in/2011/10/blog-post_25.html

| edit post

தியானம்

Posted by ss Saturday, January 11, 2014 0 comments

எளிய தியான முறை
1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

 2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

 3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

 4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

 5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

 6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

 7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

 8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

 9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.


 மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும். தேவையான அளவு தியான முறைகளைச் சொல்லி விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். 

படித்த இடம் :http://enganeshan.blogspot.in/2010/08/42.html

தியான யுக்திகள்


தியான யுக்தி – 1
சோகம் மிக சிறந்த தருணம்
சோகம் வரும் கணம் ஒரு ஆழ்ந்த புரிதலுக்கான கணமாக மாறக்கூடும் ஏனெனில் ஏதோ ஒன்று உன் இதய ஆழத்தை தொட்டுள்ளது. இப்போது நேரத்தை வீணாக்காதே. அதன் மேல் தியானம் செய். அதை ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார். வெறுமனே கோபமாக இருக்காதே. வெறுமனே சோகமாக இருக்காதே. அது தியானம் செய்வதற்கான மிக அற்புதமான தருணமாகும்.
தியான யுக்தி - 2
திரைபடமாக அனுபவி
நீ மனதின் திரைபடத்தை முழுமையாக அனுபவிக்கலாம். பல்வேறு அற்புதமான திரைபடங்கள் திரையில் ஓடும், நீ வெறுமனே பார்க்கலாம். எந்த படமும் இவ்வளவு அற்புதமான நாடகமாகவோ, ஆர்வமூட்டுவதாகவோ இருக்காது. ஆனால் நீ ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.
தியான யுக்தி - 3
இரண்டுபட்டவனல்ல
எப்போதெல்லாம் நீ கோபமடைகிறாயோ, உனது நண்பன் அல்லது உனது மனைவி அல்லது கணவன் என யார்மீது கோபம் வந்தாலும் - அது மிகச் சிறிய விஷயமாக இருக்கும், ஒரு தினகாலண்டரில் இருந்து தேதியை கிழிக்கும் விஷயமாக கூட இருக்கலாம் சேர்ந்து வைத்திருக்கும் கோபம் வெறுப்பு வெளிவரும் இதை நீ எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறாயா எப்போதெல்லாம் இப்படி நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இயந்திரதனமாக இல்லாமல் தன்னுணர்வோடு இரண்டுபட்டவனல்ல என்று சொல். உடனடியாக நீ உன் இதயத்தின் உள்ளே தீடீரென ஒரு தளர்வு நிலையை உணர்வாய்.
இரண்டுபட்டவனல்ல என்று சொல், அப்போது அங்கே தேர்ந்தெடுக்க எதுவுமில்லை, தேர்வு என்பதே இல்லை, விரும்பவோ, வெறுக்கவோ எதுவுமில்லை. பின் எல்லாமும் சரியாகிவிடும், நீ எல்லாவற்றையும் அரவணைக்கலாம். பின் வாழ்க்கை உன்னை எங்கே கொண்டு சென்றாலும் சரி, நீ செல்லலாம். வாழ்விடம் நீ இணைப்புணர்வு கொள்வாய்.
தியான யுக்தி - 4
ஆனந்தத்தை ஈர்த்துக் கொள்
நீ என்ன செய்தாலும் அது ஆனந்தத்தை உனக்குத் தருமா என்பதில் தெளிவோடு இரு. அது ஆனந்தத்தை கொண்டு வராது என்றால் அதை விட்டுவிடு, அதை செய்யாதே. அது உனக்கு துன்பத்தை தரும் என்பதை உன்னால் பார்க்க முடிந்தால் அதை மறந்து விடு. நேரத்தை வீணடிக்காதே. கடந்த காலத்தில் அதன் மூலம் நீ துன்பப்பட்டாய் என்பது உனக்கு தெரிந்தால், என்றாவது ஒருநாள் அது சந்தோஷத்தை கொண்டுவரும் என்று நம்பிக்கை கொள்ளாதே. அது கொண்டு வராது.
ஒரு சிறிதளவு சந்தோஷத்தை அது கொடுத்தால் கூட அதை அறிகுறியாக எடுத்துக் கொள். அதனுள் ஆழமாக செல், அதை மறுபடி மறுபடி செய், அதை மேலும் மேலும் அதிகமான அளவில் செய், அதன் ஓட்டத்துடன் செல். எந்த வாய்ப்பையும் தவற விடாதே. ஒவ்வொருவருக்கும் சிறிய அளவிலான சந்தோஷம் நிகழும், அதை கொண்டாடு. பின் அது மேலும் மேலும் அதிக அளவில் நிகழ ஆரம்பிக்கும். நீ உன்னுள் சந்தோஷத்தை ஈர்க்கக்கூடிய மின்காந்த சக்தியை உருவாக்கிக் கொள். நீ ஒரு நேர்மறை சக்தி கொண்ட காந்தமாக மாறு.
தியான யுக்தி - 5
பேச்சை நிறுத்து.....உனது அன்பை வெளிப்படுத்து
எப்போதெல்லாம் நன்றாக உணர்கிறாயோ, உணரு. அங்கு மனதையோ, மொழியையோ கொண்டுவந்து அதை ஆராய்ச்சி செய்யாதே. செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு எந்த அடையாளமும் தேவையில்லை. ஏனெனில் எந்த அடையாளமும் உண்மையில்லை. நன்றாக இருப்பதாக உணரும் அந்த உணர்வு அழிவற்றது. நீ அதை நல்லது என குறிப்பிடும்போது நீ அதை சாதாரணமானதாக மாற்றி விட்டாய். யாரிடமாவது நீ நேசத்தை உணர்ந்தால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லும்போது அதன் புனிதத்தை குறைத்து விட்டாய். நீ அதை ஏற்கனவே கெடுத்து விட்டாய், புரிகிறதா? இந்த வார்த்தை குலைத்துவிடுகிறது. நீ உனது முழு இருப்பின் மூலம் அதை காட்டு. அதை அனுபவி. மற்றவர் அதை உணரட்டும்..... ஆனால் அதைப்பற்றி எதுவும் சொல்லாதே. 

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates