Followers

Powered by Blogger.
Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

திடீர் பண வரவிற்கு எளிய தாந்த்ரீக பரிகாரம்
 
தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையைசெய்து வர திடீர் பண வரவு உண்டாகும்-செல்வ நிலை உயரும்.
இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சக்கரை சேர்த்து வேக வைக்கவும்.குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும் பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ :

பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம்.

திருப்புல்லாணி அருகே தேவிபட்டணத்தில் நவபாஷாணம் என்றழைக்கப்படும் சமூத்திரக் கரையில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகத்தை வழிபட்டு, பாவ நீக்கம் செய்து கொள்ளலாம். கலியுகத்தில், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட ராமேஸ்வரம், மிக முக்கிய தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்ய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு வீட்டிலிருந்து, நடைபயணம் செய்தால் மிக நல்லது.

பரிகார நடைமுறைகள் : - பரிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி, சேர்ந்து செய்ய வேண்டும். குழந்தைகளையும் சேர்த்துத்தான் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் போது திருநீறு, திருமண், சந்தனம் அணிய வேண்டும். முழு நம்பிக்கையோடு ஈடுபாட்டோடு, ஒற்றுமையோடு பரிகாரம் செய்ய வேண்டும்.

வேதம் கற்றறிந்தவர்களுக்கு, ஆன்மீக அன்பர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சூரியன், உச்சிப் பொழுதிற்கு வருவதற்கு முன்பாகவே, பரிகாரங்களைச் செய்ய வேண்டும். மாலை, இரவு நேரங்களில் தெய்வ வழிபாடு செய்யலாமே தவிர, பரிகாரங்களைச் செய்யக் கூடாது.

விதிவிலக்காக அந்திக்குப் பிறகு செய்யக் கூடிய சில வழிபாடுகள், படையல்கள், பரிகாரங்களைப் பற்றியும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பரிகார பூஜையின் போது குடம், சொம்பில் தீர்த்தம் வைப்பர், பூஜை முடிந்த பின் அந்தத் தீர்த்தத்தைக் குடிப்பர்.

மீதமுள்ள தீர்த்தத்தை வீட்டில் உள்ள கிணற்றில் கொட்டலாம். வீட்டில் கிணறு இல்லாவிட்டால், அடுத்தநாள் காலையில் பாதுகாப்பாக வைத்திருந்து, தலையில் ஊற்றிக் குளிக்கலாம், எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டின் குளியல் அறையிலோ, சாக்கடையிலோ கொட்டி விடக் கூடாது. சுக்கில பட்சம் மற்றும் வளர்பிறை நாட்களில் செய்யும் பரிகாரம் சிறப்பானது.

கிரகத்தின் ஜனன மாதம், கிரகத்தின் கிழமை, கிரகத்தின் நட்சத்திரம் ஆகியன ஒன்று சேர்ந்த நாளாக இருந்தால், அது மிக மிக பரிகாரம் செய்ய உகந்த நாளாகும். புதனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புதன், சிம்மத்தில் இருந்தால், சூரியனுக்குரிய ஞாயிறு அன்று செய்வது நல்லது.

ஜென்ம நட்சத்திரம் வரும் காலத்தில், சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜென்ம நட்சத்திரமே சிறப்பானது. சுபமான காரியங்களுக்கு வளர்பிறையும் அதிகத் துன்பம் கொடுக்கும் விஷயங்களுக்கு கிருஷ்ணபட்சத்திலும் பரிகாரம் செய்யலாம்.

 பரிகாரம் செய்வதற்கு உகந்த இடங்களாக - குளக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை, சிவன், விஷ்ணு ஆலயங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இருக்கும் வீட்டில் செய்யக் கூடியவைகள்- கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் லட்சுமி நாராயணபூஜை ஆகியனவாகும். பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், உரிய பரிகார பூஜை செய்து, தோஷம் நீங்கி, அனைத்து வளங்களும் பெற தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருள் புரிவாள். 


http://www.maalaimalar.com/2014/04/04091051/brahma-hasthi-dosham-pariharam.html

மனித உயிர்களின் ஜீவிதகாலம் நிறைவடைந்தப் பின்னர்,இப்பூவுல வாழ்க்கையில் புண்ணியம் செய்தவர்களானாலும்,பாவங்களைச் செய்தவர்களானாலும் தர்மலோகம் சென்று அங்கு தர்மராஜர் முன்பு நிறுத்தப்படுவர்;அங்கே அவரவர் செய்த நற்செயல்கள்(புண்ணியம்) மற்றும் தீயச்செயல்கள்(பாவங்கள்) ஆகியவற்றுக்கேற்ப புண்ணிய உலகங்களுக்கோ அல்லது நரக உலகத்திற்கோ அல்லது மீண்டும் இப்பூவுலகிற்கோ அனுப்பப்படுகிறார்கள்.(ஆதாரம்:கருடபுராணம்)
மகத்தான புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தமஜீவர்களுக்கு தர்மராஜர் சம ஆசனம் கொடுத்து அவர்களை கவுரவித்துவருகிறார்;கவுரவிப்பார்;அதன்பின் புண்ணிய உலகங்களுக்குச் சகல மரியாதையுடன் சொர்ணமயமான விமானங்களில் அனுப்பி வைத்தார்;வைக்கிறார்;வைப்பார்;என்றும் புராணங்கள் விவரித்துள்ளன.
மறுபிறவியற்ற ஜீவன் முக்தர்கள் திருக்கையிலாயம்,பரமபதம் போன்ற உலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்;அங்கு இறைவனுடன் ஒன்றி நித்திய சாயுஜ்யப் பதவியைப் பெற்றுவிடுவர்.
இந்நிலையில் இப்பூவுல வாழ்க்கையின் போது அளவற்ற பாவங்களைச் செய்தவர்களைக் கூட பயங்கரமான,கொடிய தண்டனையைக் கொடுக்க அவ்வளவு எளிதில் தர்மராஜனுக்கு மனவராதாம்.ஆதலால்,அத்தகைய பாவிகள் கூட ஏதாவது ஒரு சிறு புண்ணியம் செய்திருந்தால் அதனைக் காரணம் காட்டியாவது மீண்டும் உலகிற்கே மறுபிறவி எடுக்க அனுமதித்து நரகவேதனையில் இருந்து அந்த ஜீவனைக் காப்பாற்றிவிடலாம் என கருணை மிகுந்த தன் திருவுள்ளத்தில் நினைப்பாராம் தர்மராஜர்.
ஆதலால்,கொடிய பாவங்களைச் செய்துள்ள ஜீவனைப் பார்த்து சிறு புண்ணிய காரியமாவது செய்திருக்கிறாயா? பசித்தவனுக்கு உணவு கொடுத்திருக்கிறாயா? புண்ணிய நதியில் நீராடியிருக்கிறாயா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வருவாராம்;எல்லா கேள்விகளுக்குமே ‘இல்லை’ என்று சொல்லும் ஜீவனிடம் கடைசி முயற்சியாக “ கொக்கராயன் திருக்கோவில் கோபுரத்தையாவது கண்ணால் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்பாராம்.
இந்த சிறு புண்ணியத்தையாவது அந்த ஜீவன் செய்திருந்தால் அந்த காரணத்தைக் கொண்டு அந்த ஜீவனின் நரகவேதனையைத் தவிர்த்துவிடலாமே என்று ஏக்கத்துடன் தான் இக்கேள்வியைக் கேட்பாராம். ‘அவற்றை நான் பார்த்ததில்லை’ என்று அந்த ஜீவன் பதிலளித்துவிட்டால் வேறு வழியில்லை என்று நரகத்திற்கு அனுப்பி வைப்பாராம்.
புராணத்தில் இருக்கும் ஸ்தலவரலாறு:
பிரம்மதேவனுக்கு ஒருமுறை படைப்புத் தொழிலைச் செய்யும் யாமே பெரியவர் என்ற ஆணவம் கொண்டு சிவனை வணங்காது இருந்தார்.ஆணவம் தலைக்கேறியது.சிவ அபவாதம் நேரிட்டது.அப்பாவச் செயலால் மறதியில் வீழ்ந்தான் பிரம்மன்.உறக்கத்தில் ஆழ்ந்தான்;உறக்கம் நீங்கி எழுந்தான்.எப்போதும் போல படைப்புத்தொழில் செய்ய முனைந்தான்;தொழில் கைகூடவில்லை! என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்தான்.
ரிக்,யஜீர்,சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களையும் கொண்டு நான்முக பிரம்மா படைப்புத்தொழில் இயற்ற இயலாமல் வருந்து சிவப்பரம்பொருளை நோக்கித் தியானித்தார்.அப்போது தேவரிஷி நாரதர் அவர் முன் தோன்றி, “நீங்கள் செய்த சிவ அவராதம் மிகவும் கொடியது.எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமாய் நிற்கும் மூர்த்தி பசுபதியாகி ஆன்மாக்களிடம் மலத்தேய்வை ஏற்படுத்த பிறவிகள் தோறும் பிறப்பெடுக்கச் செய்கிறார்.ஆணவம்,மாயம்,கன்ம மலங்களை விடுத்து பசுவாகிய உயர்பதியாகி இறைவனோடு சேர பூவுலகில் பல்வேறு இடங்களில் ஆலயம் அமைத்து பக்திநெறி செலுத்தி உய்ய வழி செய்துள்ளார்.
நீவிர் செய்த கொடுஞ்செயலுக்கு ஈரோடு காவிரிக்கரையில் மாமரங்கள் அடர்ந்த(கொக்கு=மாமரம்) கொக்கு அரையன் பேட்டை வனத்தில் தவம் இயற்றினால் சிவபெருமான் காட்சி தருவார்.உமது பாவம் தீரும்” என்றார்.
பிரம்மனும் பூவுலகிற்கு வந்து,காவிரிக்கரையில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து,பல ஆண்டுகள் தவமிருந்தார்.பிரம்மன் உருவாக்கிய லிங்கமே பிரம்மலிங்கம் என்ற பெயரில் அருள்பாலித்துவருகிறார்.பிரம்மனது தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அங்கு தோன்றி பிரம்ம தேவரின் சிவ அபவாதத்தை நீக்கினார்.பிரம்ம தேவரின் வேண்டுதலின்படி இவ்விடத்திற்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வளமான வாழ்வு பெறா ஸ்ரீபிரம்மதேவர் பூஜித்ததாக ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது.
இங்குள்ள பைரவப்பெருமான் சிறப்பு அம்சங்களைக் கொண்டவர்.எட்டுத் திருக்கரங்களுடன்,நாய் வாகனம் இன்றியும்,முப்புரிநூலாக நாகத்தை அணிந்தும் காட்சி தருகிறார்.இத்தகைய வடிவத்தை வடுகபைரவர் என்று ஆகமசாஸ்திரம் தெரிவிக்கிறது.அஷ்ட பைரவர்களில் இவர் சத்ரு சம்ஹாரபைரவராக இருக்கிறார்.சத்ரு உள்ளவர்கள் இங்கே வந்து தேய்பிறை அஷ்டமி நாட்களில் வரும் இராகு காலத்தில் தேங்காய்மூடியில் அல்லது சாம்பல் பூசணி(திருஷ்டிப் பூசணி)யில் விளக்கு ஏற்றி,பைரவ சஷ்டிக்கவசம் பாடி வழிபட்டால்,எதிரிகள் அடங்குவர் என்பது ஐதீகம்.
நாமக்கல் மாவட்டம்,திருசெங்கோடு வட்டத்தில் கொக்குராயன்பேட்டையில் ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.ஈரோட்டில் இருந்து 16 கி.மீ.தொலைவில் இவ்வூர் அமைந்திருக்கிறது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,தனது ஜன்ம நட்த்திர நாட்களில் இங்கே வந்து,மூலவருக்கும்,ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்தால்,வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.தொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் வந்து வழிபடுவது நன்று.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
 
 
 

பைரவாஷ்டமி

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி திதி, பைரவாஷ்டமியாக அனைத்து பைரவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. பைரவருக்கு 64 திருவடிவங்கள் கூறப்பட்டுள்ளன. பொதுவாக ஆலயங்களில் அருளும் பைரவர் தலையின் மீது ஜ்வாலை, திருவடிகளில் சிலம்பு, மார்பில் கபால மாலை போன்றவற்றைத் தரித்தவர்; முக்கண் கொண்டவர். திரிசூலம், கபாலம், நாகபாசம், உடுக்கை, டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர். ஆடை அணியா அழகராக, நிர்வாண வடிவில் நாய் வாகனத்துடன் காட்சி தருவார்.

சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும் இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவுப் பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்து சந்நதிகளையும் பூட்டி அந்த சாவிகளை பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்னரே ஆலயத்தைப் பூட்டுவது மரபு. சிவாலயத்தின் காவலராக இருந்து எந்த இடையூறோ, இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை க்ஷேத்ரபாலகர் என பக்தர்கள் வணங்குகின்றனர்.

அஷ்டமி திதியன்று சிவாலயங்களில் உள்ள பைரவரை வழிபட ஐஸ்வர்யம், சுகம், பொன் பொருளையும் தருவார். அஷ்டமி திதியன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்று விரதமிருந்து ஒருவேளை உணவு மட்டும் உண்டு பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, எண்ணியன எல்லாம் ஈடேறும்.

பைரவமூர்த்தி பல்வேறு ஆலயங்களில் பரிபூரணமாக அருள்கிறார். ஈரோட்டுக்கு வடக்கே 34 கி.மீ. தொலைவில் அந்தியூர் செல்லீஸ்வரர் ஆலயத்தில் பைரவர் ஐம்பொன் சிலா ரூபமாகக் காணப்படுகிறார்.

புதுக்கோட்டை-திருமயம் சாலையில், தபசுமலையில், மலைமேல் சொர்ணபைரவரும் மலையடிவாரத்தில் கௌசிக சித்தர் ஆஸ்ரமத்தில் ஐம்பொன் வடிவ பைரவரும் அருள்கின்றனர்.

கும்பகோணம்-கஞ்சனூர் சாலையில், திருலோக்கி செல்லும் பாதையில் உள்ள கீழ்ச்சூரியமூலை சூர்யகோடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பைரவமூர்த்திக்கு தீபாராதனை காட்டும் போது பைரவர் கழுத்தில் மெல்லியதான சிவப்பு நிற ஒளியை தரிசிக்கலாம்.

கரூர் மாவட்டம், முசிறிக்கு அருகில் உள்ள தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாதர் ஆலயத்தில் 5 திருமுகங்கள், 10 கரங்கள் கொண்ட பைரவர் அருளாட்சி புரிகிறார்.

மயிலாடுதுறை-சிதம்பரம் பாதையில் உள்ள சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலய 3ம் பிராகாரத்தில் அஷ்டபைரவர் சந்நதி கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று மட்டும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை இச்சந்நதி திறந்திருக்கும். கருவறை விமானத்தில் சட்டைநாதர் எனும் பெயருடன் பைரவர் தரிசனமளிக்கிறார்.

சேலம் ஆத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது சின்ன சேலம். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபைரவர்களுக்கு தனித் தனி சந்நதிகள் உண்டு. இவர்களில் கபால பைரவர் ஆலய கோபுரத்தில் எழுந்தருளியுள்ளதும் பீஷண பைரவர் பலி பீட உருவில் உள்ளதும் அதிசயமான அமைப்பாகக் கருதப்படுகிறது.

திருக்குவளை-வேதாரண்யம் பாதையில் உள்ள திருவாய்மூரிலும் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம்.

தென்காசியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள குற்றாலம் சித்திர சபையில் உள்ள வடக்குப் பிராகார சுவரில் அஷ்டபைரவர்கள் சித்திர ரூபமாக தரிசனம் தருகிறார்கள்.

நாகப்பட்டினத்தில் உள்ள கட்டுமலை மீது சட்டையப்பர் எனப்படும் பைரவர் ஆலயம் உள்ளது. இங்கு அமுதவல்லி தேவியுடன், பைரவரை ஐம்பொன் சிலையாக தரிசிக்கலாம்.

சென்னை- நாகலாபுரம் தடத்தில் ராமகிரி கூட்டுச்சாலையிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் சக்தி வாய்ந்த பைரவர் தனி சந்நதியில் வீற்றருள்புரிகிறார்.

சென்னை - திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 7 பைரவ மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 5 பைரவர்களை தரிசிக்கலாம்.

கும்பகோணம்-திருமங்கலம் பாதையில் உள்ள திருவிசநல்லூர் சிவலோகநாதர் ஆலயத்தில் 4 பைரவர்கள் சதுர்காலபைரவர்கள் என்று போற்றி வணங்கப்படுகின்றனர்.

மேல்மருவத்தூர்-செங்கல்பட்டு சாலையில் உள்ள மதுராந்தகம் திருவெண்காடுடைய மகாதேவர் ஆலயத்தில் நான்கு பைரவர்களை தரிசிக்கலாம்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி-திருமருகல் சாலையில் திருப்புகலூருக்கு 5 கி.மீ. கிழக்கில் சீயாத்தமங்கை வன்மீகநாதர் ஆலயத்தில் 2 சிறிய பைரவர்களும் 4 அடி உயரமுள்ள காலபைரவரும் கொலுவிருக்கின்றனர்.

திருவிடைமருதூர், பரசலூர், சேந்தமங்கலம், திருத்துறைப்பூண்டி, திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வரன் ஆலயம், காளஹஸ்தி, திருவையாறு, கண்டியூர் ஆகிய தலங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு பைரவ மூர்த்திகளை தரிசிக்கலாம்.

மதுரை-காரைக்குடி பாதையில் 63 கி.மீ. தொலைவில் திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில், கையில் இடியை ஏந்தி, சம்மணமிட்ட நிலையில் உள்ள பைரவரை தரிசிக்கலாம். ஸ்ரீவாஞ்சியம், திருப்புகலூர் தலங்களிலும் இந்த யோகபைரவ வடிவைக் காணலாம்.

திருக்கண்டேச்வரம் நடன பாதேஸ்வரர் ஆலயத்திலும், புல்வயல் விசுவநாதர் ஆலயத்திலும் 6 கரங்கள் கொண்ட பைரவமூர்த்தி தரிசனம் தருகிறார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திலும், தஞ்சை பெரிய கோயிலிலும் 8 கரங்களுடன் பைரவர் அருள்கிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிச்சியூர் சுகந்தவனேஸ்வரர் ஆலயத்தில் அருளும் பைரவ மூர்த்தி நவபாஷாணக் கல்லால் ஆனவர். இவருக்கு நிவேதனமாக சாத்தப்படும் வடைகளின் நிறம் மாறுகிறது. அந்த வடைகளை யாரும் பிரசாதமாக சாப்பிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய கிழக்கு கோபுரத்தைக் கடந்தவுடன் 7 அடி உயரமுள்ள பைரவரை தரிசிக்கலாம்.

நாகப்பட்டினம் காயாரோகணர், சேந்தமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆகிய தலங்களில் 10 கரங்களுடன் பைரவரை தரிசிக்கலாம். இதில் நாகப்பட்டினம் காயாரோகணர் ஆலயத்தில் நாய் வாகனத்திற்குப் பதிலாக சிங்கம் வாகனமாக இருக்கிறது.

பழநி சாதுசுவாமிகள் மடத்தில் 8 அடி உயரமுள்ள விஜயபைரவ மூர்த்தி எழில் தோற்றம் காட்டுகிறார்.

விருதுநகர், சாத்தூர் ஏழாயிரம் பண்ணை சாலையில் ஓ.மேட்டுப்பட்டியிலும், தகட்டூரிலும், க்ஷேத்திரபாலபுரத்திலும், மதுரை கீழ ஆவணிமூல வீதியிலும், வைரவன் கோயிலிலும், காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் அருகே அழிபடைதாங்கி எனும் மோட்டூரிலும் பைரவர் தனிக்கோயில் கொண்டுள்ளார். இதில் அழிபடை தாங்கியில் உள்ள மண்ணை எவ்வளவு எடுக்கிறோமோ அவ்வளவு நெல்லை அதில் கொட்ட வேண்டும். பிறகு எடுத்துச் செல்லும் மணலை நம் நிலத்தில் தூவ, கட்டிட வேலை தடையின்றி நடக்கும் என்கிறார்கள்.

காரைக்குடியில் உள்ள இலுப்பைக்குடியிலும், மாத்தூரிலும், சாக்கோட்டையிலும் பைரவர் இரு நாய்களுடன் அருள்கிறார்.

சிதம்பரத்தில் அருளும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் முன் தில்லைவாழ் தீட்சிதர்கள் ஸ்வர்ணகாலபைரவம் எனும் பைரவர் துதியை அறுபத்து நான்காயிரம் முறை ஜபித்து, வைத்துவிட்டுச் செல்லும் செப்புத் தகட்டை பைரவர் பொன்தகடாக மாற்றி, அவர்களுக்கு வளமான வாழ்வைத் தந்தருளியதாக வரலாறு கூறுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் வளரொளிநாதர் ஆலயத்தில் பைரவர் ஈசனுக்கும் அம்பிகைக்கும் நடுவே சோமாஸ்கந்த பைரவராக அருள்கிறார்.

திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் திருக்கோஷ்டியூருக்கு 1 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில், குழந்தை வடிவாக, பால பைரவராக அருள்கிறார்.

திருப்போரூர் முருகன் ஆலயத்திலும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்திலும் பைரவரை அமர்ந்த திருக்கோலத்தில் காணலாம்.

திருநெல்வேலி சங்கரன் கோயிலில் கைகளில் சர்ப்பம் ஏந்திய சர்ப்ப பைரவரை தரிசிக்கலாம். காரைக்குடியில் உள்ள சூரக்குடி தேசிகநாத ஆலயத்தில் கதாயுதம் ஏந்திய பைரவமூர்த்தி அருள்கிறார்.

மதுரை வண்டியூர் தெப்பக்குள மாரியம்மன், தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி ஆகிய தலங்களில் சூரிய, சந்திரனோடு கூடிய பைரவமூர்த்தியை தரிசிக்கலாம்.

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள திருவாண்டார் ஆலயத்தில் முண்டகன் எனும் அசுரனைக் கொன்ற வடுக பைரவரை வழிபடலாம். தாடிக்கொம்பு சௌந்தரராஜர் ஆலயத்தில் தனி சந்நதியில் பைரவர் காணப்படுகிறார். பெருமாள் ஆலயத்தில் பைரவர் இருப்பது அபூர்வமானது.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி, சந்தான பாக்கியம், வழக்குகளில் வெற்றி, திருமணத்தடை, கல்வித் தடை நீக்கம், இழந்த பொருட்கள் திரும்பக் கிடைத்தல் போன்றவை பைரவர் அருளால் கிட்டும்.

படித்த  இடம் :http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1725&Cat=3




என் குருநாதர் சாய் பாபா உபாசகர்( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது 

பைரவரை வழிபடும் முறை :

நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் / பிரச்சனைகளுக்கும் ஒரே  தீர்வு
http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து ,துர்மரணம், ஜாதக தோஷங்கள் , மாந்திரீக பாதிப்புகள்  இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல்  கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 


திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் . அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும்  ஒரே சக்திதான் .


இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் .

தகவல் : என் குருநாதர் சாய் பாபா உபாசகர்
( முக்காலமும் அறிந்தவர் )




என் குருநாதர் சாய்பாபா உபாசகர் சொன்ன பரிகார தகவல் இது 


(என் வாழ்கையில் இதுவரை எல்லாமே என் குருநாதர் வாக்கு படியே நடந்து கொண்டிருக்கிறது )
 
எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்

எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி  தெரியாமல் தடுமாறுபவர்கள் ,

பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய 

முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் , வசதி இல்லாதவர்கள் 
 
ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என 


எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்

ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள்

இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம் 



1) வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் விநாயக பெருமானை வணங்கி ( எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ) ஒரு விளக்கு ஏற்றி பிறகு பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கலாம் 



2) தினமும் பைரவருக்கு ஒரு (சாதாரண) விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்

3) தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7
சாதாரண விளக்கு போட வேண்டும் , அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம் .


4) வெளிநாட்டில்  இருப்பவர்களுக்கு  அவர்கள் சார்பாக ( அவர்களுக்காக ) அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் இந்த வழிபாட்டினை செய்யலாம் 


பைரவரே கால சக்கரத்திற்கு அதிபதி , அனைத்து கோள்களையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் ( இயக்கத்திற்குள் ) வைத்திருப்பவர் , 

ஞாயிறு - சூரியன் கோளையும் ,திங்கள் - சந்திரன் கோளையும் , செவ்வாய் - செவ்வாய் கோளையும் , புதன் - புதன் கோளையும் , வியாழன் - குரு கோளையும் , வெள்ளி - சுக்கிரன் கோளையும் , சனி - சனி கோளையும் 

என 7 நாட்களும் ஒவ்வொரு கோளுக்கு உகந்த நாட்கள் 


( ராகு , கேது  கோள்கள் கிடையாது , அதனால் தினமும் ராகு காலம் , எம கண்டம் என அவற்றிக்கென  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது  )

அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கம் பைரவரை வணக்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும் .

ஆகையால் தினமும் விளக்கு போட முடியாதவர்கள் ( தவிர்க்க முடியாத காரணத்தினால் ),  வாரத்திற்கு ( 7 நாட்களுக்குள் ஒருமுறை ) ஒரு நாள் 7 விளக்கு போட்டு வர வேண்டும் 

 

விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை 

அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும் 

வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும் 

தெரியும் .

நாம் வேண்டுவது , பட்டியலிடுவது எதுவுமே நடக்காது , நமக்கு எதெல்லாம் அத்தியாவசிய தேவையோ அதுதான் ஒவ்வொன்றாக கிடைத்து கிட்டே இருக்கும் ( இத்தனை நாள் எல்லாம் கணக்கு கிடையாது , ஆனா கண்டிப்பா கிடைக்கும் )


நாம செய்து கொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைப்பதற்க்காக ,ஆரம்பத்துல கொஞ்ச நாள் சோதனை ங்கற  பேர் ல ரொம்ப படுத்தி எடுத்துருவார். என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்ட செய்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

 கெட்ட விஷயங்கள், கஷ்டங்கள் - துன்பங்கள்  எல்லாமே  நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் ,  நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக  கண்டிப்பா நடக்க ஆரம்பிக்கும் . நாம்  எந்த நிலையில் இப்போ இருந்தாலும் , முன்னேற்றத்த நோக்கி போக ஆரம்பிப்போம். அதற்க்கு சில சிக்கல்களும் , அதை தீர்க்கும் வழி முறைகளையும் அவரே கொடுப்பார் , இதுதான் இந்த வழிபாட்டோட முதல் அறிகுறி . இந்த மாற்றம் வெளிப்படையாகவே நமக்கு தெரியும் .







இந்த வழிபாட்டோட பலனுக்கான அறிகுறி 

உங்களுக்குள்ளான ,உங்களுக்கே  தெரியாத  உங்களுக்கு அத்தியாவசிய  தேவையான ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) உங்களுக்குள்ள இருந்து வெளிபடும் 

அந்த ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) தான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் உங்களுக்கு கொடுக்கும் . 

அதற்காக உங்களுக்கு அளவுக்கதிகமான விரக்தியும் , தேவைபட்டால் பெரிய அவமானத்தையும் கொடுப்பார் . கண்டிப்பா உயிருக்கு எந்த பிரச்னையும் வராது . முன்பை விட ரொம்ப தெளிவாகவும் , பக்குவ பட்ட மன நிலையையும் அடைந்து இருப்பீர்கள் .

உதாரணத்துக்கு சொல்லனும்னா  நமக்கு வேண்டியவர்கள் நமக்கு  நீச்சல் கத்து கொடுக்கும் போது  நம்மை கிணத்துல தள்ளி விட்டு கூடவே இருந்து நீச்சல் கத்து கொடுப்பாங்க, நம்மள உள்ள முழுக விடாமலும்  பார்த்துக் கொள்வார்களே  அது போலதான் இருக்கும் பைரவர் ஸ்டைல் .

உங்களால தப்பி தவறி கூட தவறான வழியிலோ , குறுக்கு வழியிலோ  போக முடியாது .

இது தான் வாழ்க்கை , இப்படிதான் வாழணும் ன்னு தீர்க்கமாக  ஒரு நல்ல  முடிவு எடுக்க வைப்பார் , ஆறு மாசத்துக்கு ஒரு முறை அல்லது வருசத்துக்கு ஒரு முறை வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி  கூட்டிட்டு போவார் 

சுருக்கமாக சொல்லனும்னா நம்ம வாழ்க்கையை பைரவர் கையில் எடுத்து கொள்வார் , அவரே நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் , பைரவரே  குருவாக இருந்து வழி நடத்த ஆரம்பிப்பார் . சூட்சம வடிவில் எப்போதும் கூடவே இருப்பார் , குருவாகவும் ( சூட்சம வடிவில்)  இருப்பார் , இதை உணர கொஞ்ச  காலம் ஆகும் , நிச்சயமாக இந்த வழிபாட்டை பின்பற்றும் அனைவராலும் இதை உணர முடியும்.  

நம்முடைய கர்ம வினை நம்மை பைரவரை வழிபட (நிறைவான வாழ்க்கை வாழ ) அனுமதிக்கவே அனுமதிக்காது , நிறைய தடைகளை ஏற்படுத்தும் , சோம்பேறிதனத்த உண்டு பண்ணும் , நாமே எதாவது காரணம் சொல்லிக்கிட்டு கொஞ்சநாளில்  அப்படியே விட்டு விடுவோம் . இந்த மாதிரி தடைகளையெல்லாம்  பொருட்படுத்தாமல் அலட்சியபடுத்தி விட்டு  நாம்தான் விடா முயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வர வேண்டும் . ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் , அப்பறம் சரியாகிவிடும் .




( இது நிறைய பேரோட அனுபவம் ).



ஆரம்பத்துல என் குருநாதர் இந்த தகவல  சொல்லும்போது  இதோட வலிமை தெரியாமல் ரொம்ப சர்வ சாதரணமாக நினைத்தேன் ,செய்துகொண்டே இருக்கும் போதுதான் வலிமையை உணர முடிகிறது .

 
ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் வரை விடாமல் தொடர்ந்து  இந்த வழிபாட்டை செய்து வாருங்கள் . அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து வாருங்கள் .
தினமும் பசிக்கு சாப்பிடுவோமே அதை போல ஒரு அத்தியாவசிய தேவையாக இந்த வழிபாட்டை வாழ்க்கைக்கு மாற்றி  கொள்ளுங்கள் 

  64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் விளக்கு போடலாம் .

 காசியில் இருக்கும் பைரவரில் இருந்து நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சின்ன கோவில்களில் இருக்கிற பைரவர் வரைக்கும் எல்லா பைரவருக்கும்  ஒரே சக்திதான்



 
நிபந்தனை : 


 ஆரம்பிக்கற நாள்  வளர்பிறை  அஷ்டமி , வளர்பிறை நவமி , தேய்பிறை நவமி , பிரதமை திதி ஆக இருக்க கூடாது 

அன்றைய தினம் உங்களுக்கோ , உங்க குடும்ப உருப்பினர்கள் நட்சத்திரத்திறத்திற்கு சந்திராஷ்டமாக இருக்க கூடாது 


மிகவும் பொருத்தமான நாள் தேய்பிறை அஷ்டமி

ரொம்ப முக்கியமான விசயமே இதுதான் ,வழிபாட்டுல அலட்சியம் கூடாது , ஏன்னா அலட்சியதிற்கு நான் தண்டனை அனுபவிச்சி இருக்கேன் , ரொம்பவே கடுமையாக  இருக்கும் .

 திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு  போடணும் .விளக்கு போடும் பொது பைரவர் சிலை மூடி இருக்க கூடாது

(எந்த கோவிலும் , அந்த கடவுள் சிலை மூடியிருக்கும் போதோ / திரையிட்டு மூடி இருக்கும் போதோ / எதாவது தடுப்பு வைத்து மறைத்திருந்தாலோ / கோவில் கதவு சாத்தி இருந்தாலோ - வழிபடுவும் கூடாது , விளக்கு போடவும் கூடாது ,அப்படி செய்வதால்  எந்தவித பலனும் இருக்காது -ன்னு குருநாதர் சொல்லியிருக்கார் )

 கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது  , பைரவரே  நிறுத்த வைப்பார்  


பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய  குரு),சனிக்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர் 
உதாரணத்துக்கு சொல்லனும்னா 

சனி பகவான் நேர்மையான , கண்டிப்பான போலீஸ் ஆபீசர் என்றால்  , 

அவருடைய குருநாதர்  பைரவர் (சனி பகவானுக்கு நீதி,நேர்மை,ஒழுக்கம் ,கண்டிப்பு - என  எல்லாவற்றையும் கற்று தந்தவர் )

 ரொம்பவும் நேர்மையான கண்டிப்பான  ARMY OFFICER போன்றவர் .  









ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும்
- ஓம் சாய் ராம் 


படித்த  இடம் :http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates