Followers

Powered by Blogger.

பாவ சேர்க்கை பலன்கள் –ஓர் விளக்கம்
தசா-புக்தி பலன் நிர்ணயத்தில், ஒரு புக்தியில் குறைந்த பட்சம் ஒரு பாவம்,அதிகபட்சம் மூன்று பாவங்கள் வரை ஒரே நேரத்தில் இயங்கும். அது எப்படி என பார்ப்போம்.
கிரகங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை கீழே தரப்பட்டுள்ளன.
1. மண்டல கிரகங்கள் – சூரியன்,சந்திரன்
2. தாரா கிரகங்கள் – சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன்
3. சாயா கிரகங்கள் – ராகு,கேது
மண்டல கிரகங்களான சூரிய,சந்திரர்களுக்கு ஒரு ஆட்சி வீடு மட்டுமே உண்டு. எனவே இவர்கள் ஒரு பாவத்திற்கு மட்டுமே ஆதிபத்தியம் வகிப்பார்கள். தாரா கிரகங்களான சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகியோர்களுக்கு இரண்டிரண்டு ஆட்சி வீடுகள் உண்டு. எனவே இவர்கள் இரண்டிரண்டு பாவங்களுக்கு ஆதிபத்தியம் வகிப்பார்கள். சாயா கிரகங்களான ராகு,கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் கிடையாது. எனவே ராகு கேதுக்களுக்கு பாவாதிபத்தியம் கிடையாது. இதன்படி சூரிய,சந்திரர்கள் தான் நின்ற வீட்டிற்கும், தான் ஆதிபத்தியம் பெறும் வீட்டிற்குமாக சேர்த்து அதிகபட்சமாக இரண்டு பாவங்களை ஒரே சமயத்தில் இயக்குவார்கள். ஜாதகத்தில் அவர்கள் ஆட்சி வீட்டில் நின்றால் ஒரே பாவத்தை மட்டும் ஒரு சமயத்தில் இயக்குவார்கள். சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகியோர், தான் நின்ற வீட்டிற்கும், தான் ஆதிபத்தியம் பெறும் வீடுகளுக்குமாக சேர்த்து அதிகபட்சமாக மூன்று பாவங்களை ஒரே சமயத்தில் இயக்குவார்கள். ஜாதகத்தில் அவர்கள் ஆட்சி வீட்டில் நின்றால் இரண்டு பாவங்களை மட்டும் ஒரு சமயத்தில் இயக்குவார்கள். ராகு,கேதுக்கள் தான் நின்ற வீட்டை மட்டுமே இயக்குவார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட புக்தியில் குறைந்த பட்சமாக ஒரு பாவம்,அதிக பட்சமாக மூன்று பாவங்கள்வரை இயங்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பாவங்கள் ஒரே சமயத்தில் இயங்கும்போது, அந்த பாவங்களின் கூட்டு விளைவே ஜாதகருக்கு பலாபலன்களாக கிடைக்கும். இத்தகைய பாவங்களின் கூட்டு விளைவே பாவ சேர்க்கை பலன்கள் என கூறப்படுகிறது.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று சஷ்டாஷ்டகமாக (6-8) அமைந்தால் அவ்விரண்டு பாவங்களும் கெடு பலங்களையே செய்யும் (இரண்டு பாவாதிபதிகளும் ஒரே கிரகமாகவோ, பரஸ்பரம் நட்பு கிரகங்களாகவோ அமைந்தால் கெடு பலன்கள் அதிகமாக இருக்காது). அதாவது ஆய்வுக்குரிய பாவத்திற்கு எட்டாவதாக அமையும் பாவம் ஆய்வுக்குரிய பாவத்தை அழிக்கும். ஆய்வுக்குரிய பாவத்திற்கு ஆறாவதாக அமையும் பாவம் ஆய்வுக்குரிய பாவத்திற்கு தடைகளையும்,சிக்கல்களையும் உண்டாக்கும்.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று துவிதுவாதசமாக (2-12) அமைந்தால், ஆய்வுக்குரிய பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம், ஆய்வுக்குரிய பாவத்தை தடை செய்யும். ஆய்வுக்குரிய பாவத்திற்கு இரண்டாவதாக அமையும் பாவம் ஆய்வுக்குரிய பாவத்தை வளர்க்கும்.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று சதுர்தசமமாக (4-10) அமைந்தால், அப்பாவாதிபதிளின் பரஸ்பர நட்பு, பகை உறவை பொறுத்து, நற்பலன்களோ,தீய பலன்களோ நடக்கும். இரண்டு பாவங்களுக்கும் ஒரு கிரகமே அதிபதியாக அமைந்தால் நற்பலன்களே நடக்கும்.
ஒரே சமயத்தில் இயங்கும் இரண்டு பாவங்கள் ஒன்றுகொன்று 1-7, 3-11, 5-9 ஆக அமைந்தால், அப்பாவங்களின் கூட்டு விளைவு, ஜாதகருக்கு நற்பலன்களாக கிடைக்கும்.
உதாரணமாக தனுசு லக்கினக்காரர் ஒருவருக்கு ராகு தசையில் புதன் புக்தி நடந்துகொண்டிருக்கிறது. புக்தி நாதன் புதன் குருவின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்துள்ளார். அவருக்கு எந்தெந்த பாவங்கள் கூட்டாக இயங்கும் எனப்பார்ப்போம்.
புக்தி நாதன் நின்ற நட்சத்திர நாதனான குரு, லக்கினத்திற்கு 9ல் அமர்ந்துள்ளார். அவர் 1-4 ஆம் பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறார். எனவே புதன் புக்தி காலத்தில் 1-4-9 ஆம் பாவங்கள் கூட்டாக இணைந்து செயல்படும். இப்பாவங்களின் கூட்டு விளைவே ஜாதகருக்கு பலாபலன்களாக புதன் புக்தி காலத்தில் கிடைக்கும். புதன் புக்தி காலத்தில் ஜாதகருக்கு என்னென்ன பலன்கள் நடக்கும் என பார்ப்போம்.
முதலில் குறிப்பிட்ட புக்தியில் செயல்படும் பாவங்களை, இரு பாவ சேர்க்கைகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இதன்படி 1-4-9ஆம் பாவங்களை 1+4, 1+9, 4+9 எனப் பிரித்துக்கொள்ளவும். இவ்வாறு பிரித்து எழுதிக்கொண்ட பின் அவற்றிற்குரிய பாவ சேர்க்கை பலங்களை கணிக்க வேண்டும்.
ஒன்றாம் ,நான்காம் பாவங்களின் சேர்க்கை பலன்கள் (1+4)
ஒன்றாம் பாவம் ஜாதகரைக்குறிக்கும். நான்காம் பாவம் தாய்,மண்,மனை, வீடு,வாகனம் இவைகளைக்குறிக்கும். எனவே இவ்விரண்டு பாவங்களும் இணைந்து செயல்படும்போது, தாய்,சேய் உறவு சுமூகமாக இருக்கும் (இரு பாவ அதிபதிகளும் ஒரே கிரகமாகவோ,அல்லது பரஸ்பர நட்பு கிரகங்களாகவோ அமைந்தால் மட்டும்).
ஜாதகருக்கு வீடு,வாகன பிராப்தி உண்டு. தாய்க்கு ஜாதகரால் கௌரவம் கிடைக்கும் ( 4க்கு 10 ஆம் வீடு 1ஆம் வீடாகும். 10 ஆம் வீடு கௌரவத்தைக்குறிக்கும்). தாய் உத்யோகத்தில் இருந்தால் அவருக்கு பணிஉயர்வு கிடைக்கும். சொந்த தொழில் செய்பவராக இருந்தால் தொழில் விருத்தி உண்டு.
ஒன்றாம் ,ஒன்பதாம் பாவங்களின் சேர்க்கை பலன்கள் (1+9)
ஒன்றாம் பாவம் ஜாதகரைக்குறிக்கும். ஒன்பதாம் பாவம், தந்தை, ஆசிரியர், ஆலய வழிபாடு, குரு ஆசி, தீர்த்த யாத்திரை, நெடுந்தூர பயணம், உயர் கல்வி, ஆராய்ச்சிக்கல்வி இவைகளைக்குறிக்கும். ஒன்று, ஒன்பதாம் பாவங்கள் ஒன்றுக்கொன்று 5-9 ஆக அமையும் பாவங்களாகும். எனவே இவ்விரண்டு பாவங்களும் இணைந்து செயல்படும்போது தந்தை, மகன் உறவு சுமுகமாக இருக்கும். தந்தையும்,மகனும் பரஸ்பரம் உதவிக்கொள்வர். ஜாதகன் தன் இஷ்ட தெய்வத்தை வணங்குவதில் ஆர்வம் காட்டுவான். தந்தையார் தன் குல தெய்வத்தை வணங்குவதில் அக்கரை காட்டுவார்.பொதுவாக தந்தையும்,மகனும் ஆன்மீக விசயங்களில் அதிகம் நாட்டம் செலுத்துவார்கள். தந்தை, மகன் இருவருக்கும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
நான்காம் ,ஒன்பதாம் பாவங்களின் சேர்க்கை பலன்கள் (4+9)
நான்காம் பாவம் தாயைக்குறிக்கும். ஒன்பதாம் பாவம் தந்தையைக்குறிக்கும். எனவே தாய்,தந்தையரிடையேயான உறவு சுமூகமாக இருக்கும். நான்காம் பாவமும், ஒன்பதாம் பாவமும் ஒன்றுக்கொன்று 6-8 ஆக அமைவதால் தாய்க்கு உடல் நலம் பாதிக்கும்(4க்கு 6ஆம் பாவமாக அமைவது 9ஆம் பாவம்). தந்தைக்கு மரண பயம் உண்டாகும் (9க்கு 8ஆம் பாவமாக அமைவது 4ஆம் பாவம்). ஜாதகரின் பயணங்கள் தடைபடும்(9க்கு 8ஆம் பாவமாக அமைவது 4ஆம் பாவம்). ஜாதரின் வாகனம் பழுதடையும். ஜாதகரின் வீட்டில் பழுது ஏற்படும்(4க்கு 6ஆம் பாவமாக அமைவது 9ஆம் பாவம்).
மேற்கண்டவாறு பாவ சேர்க்கை பலன்களை கணித்து கூறவேண்டும்.







சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம் என்னும் தமிழ் வைத்திய நூல்


சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கை நூல்

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates