Followers

Powered by Blogger.

லக்ன  எண்கள் 

மாத  எண்கள் 
மேஷம்
77-181

ஜனவரி
726
ரிஷபம்
182-302

பிப்ரவரி
850
மிதுனம்
303-436

மார்ச்
996
கடகம்
437-566

ஏப்ரல்
1086
சிம்மம்
567-691

மே
1208
கன்னி
692-818

ஜூன்
1327
துலாம்
819-949

ஜூலை
6
விருச்சிகம்
950-1083

ஆகஸ்ட்
126
தனுசு 
1084-1208

செப்டம்பர்
250
மகரம்
1209-1319

அக்டோபர்
366
கும்பம்
1320-1419

நவம்பர்
491
மீனம் 
1420-1440(1-76)

டிசம்பர் 
604



 மேலே காட்டப்பட்டுள்ள அட்டவணைக் கொண்டு எளிதாக லக்னத்தினை கண்டுப்பிடிக்கலாம் 

எப்படி என்பதினை இப்பொழுது காணலாம்.

ஒருவரது பிறந்த தேதியினை யும் ,பிறந்த நேரத்தினையும்  கொண்டு கண்டுப்பிடிக்கலாம்  எவ்வாறு ?

உதாரணம் - 1
உதாரண பிறந்த தேதியும் நேரமும் 

1-7-1980  நேரம் காலை  5 – 15 A.M ( அதாவது காலை மணி 15 நிமிடம்)

பிறந்த தேதி 1 - தை  4 ஆல்  பெருக்கி கொள்ளவும் . வருவது 4 ஆகும் .(1 x4 = 4)

பிறந்த நேரம்  5-தை  60 ஆல்  பெருக்கி கொள்ளவும் (காலை எனில் அப்படியே 60 ஆல்  பெருக்கி கொள்ளவும் , மாலை எனில் நேரத்தின் மணியினை மட்டும் ரயில்வே டைமாக மாற்றி அதாவது 12 உடன் கூட்டி வந்த தொகையினை  60 ஆல்  பெருக்கி கொள்ளவும் )

பிறந்த தேதி 1 x 4 = 4
பிறந்த நேரம்  5 x 60 =300
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை)
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 15 

அதாவது ,

4 (1x4) + 300(5x60) + 6(மாத  எண்) + 15(பிறந்த நேரத்தின் நிமிடம்)எல்லாவற்றையும் கூட்ட 

= 4 + 300 + 6 + 15 = 325 (இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )

அட்டவணைப்படி மிதுனத்தில் வருகிறது .

எனவே இந்நேர டைம் படி இது மிதுன லக்னம் ஆகும் .

உதாரணம் - 2

இதுவே வேறொரு தேதியும் மாலை நேரம்மும் 


3 -7-1980  நேரம் மாலை  5 – 15 P.M ( அதாவது மாலை மணி 15 நிமிடம்)

பிறந்த தேதி 3 x 4 = 12
பிறந்த நேரம்  17 x 60 = 1020 (மாலை எனவே உடன் 12 யை கூட்டி17 ஆக அதனுடன் 60  ஆல் பெருக்க வேண்டும் )
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை)
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 15 

அதாவது ,

12 (3 x 4) + 1020(17x60) + 6(மாத  எண்) + 15(பிறந்த நேரத்தின் நிமிடம்)எல்லாவற்றையும் கூட்ட 

= 12 + 1020 + 6 + 15 = 1053 (இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )


அட்டவணைப்படி விருச்சிகத்தில் வருகிறது .

எனவே இந்நேர டைம் படி இது விருச்சிக லக்னம் ஆகும் .

இப்படி கூட்டி வரும் தொகை 1440 க்கு மேல் வருமானால் அத்தொகையிலுருந்து  1440 - தை கழிக்க மீதம் வரும் தொகை எதுவோ அது, எந்த லக்ன எண்ணிலுக்குள் வருகிறதோ அதுவே அந்த லக்னமாகும் 

உதாரணம் - 3

29 -7-1980  நேரம் மாலை  11 – 50 P.M ( அதாவது மாலை 11 மணி 50 நிமிடம்)

பிறந்த தேதி 29 x 4 = 116
பிறந்த நேரம்  23 x 60 = 1380 (மாலை எனவே 11 உடன் 12 யை கூட்டி23 ஆக அதனுடன் 60  ஆல் பெருக்க வேண்டும் )
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை)
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 50

அதாவது ,

116 (29 x 4) + 1380(23x60) + 6 (மாத  எண்) + 50 (பிறந்த நேரத்தின் நிமிடம்)எல்லாவற்றையும் கூட்ட 

= 116 + 1380 + 6 + 50 = 1552 (இந்த தொகை 1440 க்கு மேல் வருகிறது எனவே இந்த தொகையிலுருந்து  1440 - தை கழிக்க மீதம் வரும் தொகை(1552 -  1440) = 112
(இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )

அட்டவணைப்படி மேஷத்தில் வருகிறது .

எனவே இது மேஷ லக்னம் ஆகும்

படித்த இடம் :http://arrowsankar.blogspot.in/2013/02/blog-post_5391.html

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates