Followers

Powered by Blogger.

சஹஸ்ராரம் (இறுதிநிலை ஆதாரம்)

மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு சக்கரங்கள் ஆதாரமாய்த் திகழ்கின்ற போது , மூன்று நாடிகளால் இவை ( இடகலை , பிங்கலை, சுழுமுனை)கள் இரண்டிரண்டாய் பின்னப்படுகின்றன. இரண்டு சக்கரங்கள் சேருமிடம் ஒவ்வொன்றும் ஒரு முடிச்சு (கிரந்தி) எனப்படும். மூன்று கண்டங்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆதாரங்கள் ஆறும் கடந்தால் அங்கிருந்து அதாவது புருவ மத்தியில் இருந்து "பிரம்ம ரந்திரம்" என்ற பகுதி வரை எட்டு பகுதிகள் உள்ளன என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவைகள் இந்து, ரோதினி , நாதம், நாதாந்தம் , சக்தி , வியாபினி, சுமணி, மனோன்மணி என்ற பெயர்களை உடைய தான எட்டு கலைகளும் இவைகளே. இவ்வாறு ஆறு ஆதாரங்களுக்குப்பின் ஏழாவதாக ஆயிரம் இதழ் தாமரை என்றும் சஹஸ்ராரம் என்றும் கூறப்படும் சிரசின் உச்சி பாகமும், மனித உடலின் தலைக்கு மேல் பரவெளியோடு தொடர்புடையதும் காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கும் சஹஸ்ராரம் என்றும் 7வது தளமாகும். யோக வெற்றியினால் வரிசையாக ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது ஆதாரமான சஹஸ்ராரம் அடையும்போது மேற் சொன்ன அனைத்து சித்திகளும் பேரானந்த அனுபவமும் கிட்டுமென ரிஷிகள் கூறுகின்றனர். " வாசி" என்ற ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்றை இடகலை-பிங்கலை (இடம், வலமாக) ஏற்றி இறக்கி கும்பகம் மற்றும் (அகக்கும்பகம், புறக்கும்பகம்) என்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை முறையாகச் செய்வதே பிராணாயாமம் எனப்படும் பிராண ஆகுதி ஆகும். இதன் மூலமே கடினமான மற்றும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் மூலமே பிராணனை உணர்ந்து குண்டலினி சக்தியினை கீழிருந்து மேலேற்றி சஹஸ்ராரத்தை அடைவதற்கான வழிகளின் முதன்மையானதெனக் கூறுகின்றனர். அடுத்து பிராணாயமம் பற்றிய முக்கிய தொடர் விரைவில் வெளிவரும்.

Tuesday, June 30, 2009

ஆக்ஞை

சதாசிவனாரும் , மனோன்மணியாய் விளங்கும் ஞானத் தாயும் , கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே "ஆக்ஞை" என்ற ஆறாவது தலமாகும்.

இத்தலம் ஆறு ஆதாரங்களின் கடைசி என்றாலும் இதற்கடுத்தும் 7வது ஆதாரமான சஹஸ்ராரம் என்ற ஆதாரமே இறுதி ஆதாரமாகும்.

ஆக்ஞையின் வடிவம் வட்டமும்
அதன் வெளிப்புறத்தில் வலமும் இடமமுமாக ஒட்டி இரண்டு தளங்களும் அதில் ( 'ஹ','க்ஷ') என்ற இரு அக்ஷ்ரங்களுடையதாயும் திகழ்கின்றது.

விசுத்தி

ஆகாச தத்துவிறக்கமான "விசுத்தி" என்ற கழுத்து (கண்டம்) பகுதி முழுதும் நிறைந்து நிலவும் ஆதார சக்கரமாகும்.

இதன் வடிவம் அறுகோண வடிவின் மத்தியில் 16 தளங்கள் (இதழ்கள்) கொண்ட வட்டவடிவம் கொண்டதாகும்.

பஞ்சாக்ஷரத்தின் நான்காவது. எழுத்தான "வ" காரமாய் , "ஹம்" என்ற பீஜமாகவும் திகழுகின்ற ஆதாரமாகும் .

16 தளங்களில் 51 அக்ஷரங்களில் 16 உயிரெழுத்துக்களை கொண்டும் 72 சந்திர கலை அமிர்தஸ்தலமாகும் . அமிர்தம் பரவும் இடமுமாகும்.

ஆக்ஞையினின்றும் பெருகும் பரமானந்தத்தை ஜீவர்களுக்கு விநியோகிக்கும் தலமாகும்

Saturday, June 27, 2009

அனாகதம் (இதய கமலம் )

டுத்ததாக இதய கமலம் என்று அழைக்கப்பெறும் மார்புபகுதி முழுதும் வியாபித்திருக்கும் அனாகதம் என்ற ஆதாரச் சக்கரம் பல முக்கியச் சிறப்பத் தன்மைகளை கொண்டதென சித்த புருஷர்கள் விவரிக்கின்றனர். 

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறாக இருந்தாலும் சஹஸ்ராரம் என்ற 7 வது ஆதாரமே இறுதி ஆதாரமாகும். 

ஏனைய ஆறு ஆதாரங்களுக்கும் நிலைக்களனாய் இருந்துகொண்டு பிராண ஆராதனையில் தன் இயக்கத்தை நிலை நிறுத்துகிறது. 

மேல் மூன்று சஹஸ்ராரம்,ஆக்ஞை,விசுத்தி, கீழ் மூன்று மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம் இவ்விரண்டிற்கும் மைய கேந்திரமாக அனாகதம் ஒளிர்கின்றது. 

ஏனைய ஆதாரங்களை இயக்குவதன் மூலம் பிராண ஆதாரனை செய்திடினும் இயல்பாகவே சதா சர்வகாலமும் பிராண ஆதாரனையினை செய்து கொண்டிருப்பது அனாகதமே. 

அனாகதம் என்றால் அனாதி, சதா ஓங்கார ஒலியினை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாகும். 

ஸ்வாதிஷ்டானம் 52 அக்னி கலைகளையும் , மணிபூரகம் 52 சூரிய கலைகளைக் கொண்டதுபோல,அனாகதம் 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானதாகவும், இறைவன் ருத்ர ரூபியாய் இங்கே வீற்றிருத்தாலும், பஞ்சாக்ஷ்ரங்களின் நடு எழுத்தாய் விளங்கும் "சி " , நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். 


இந்த ஆதாரத்தை அறிந்து அதனுள் பிரவேசித்து விட்ட எந்த சாதகரும் மேலும் அடுத்தடுத்த ஆதாரங்களை அடைந்து மேம்படுவார்களேயன்றி அவர்களுக்கு கீழிறக்கமில்லை என்று ரிஷிகள் வர்ணித்துள்ளனர். 

சாதகர்கள் அனாகத கேந்திரத்திற்கு தன்னை வியாபித்துக்கொள்ளும்போது கீழாதரங்களில் தாம் பெற்ற அனைத்து அனுபவங்களையும் ஆழ்ந்துணரும் சித்த வடிவாக ஒளியாய் சூட்சம ஒலி உந்துதலால் மேல் மேல்நோக்கி பயணித்து சிவசக்தி சங்கமத்தில் உருவாகும். 

ஆராவமுதை பருகும் நிலைக்கு ஆட்படுத்தபடுவார்கள் . இதுவே அனாகத தளத்தின் சிறப்பு வாய்ந்த தலமாக இருப்பது கண்கூடும். 

ஒளி, ஒலி இரண்டின் அனைத்து பரிமாணங்களில் ஒருசேரத் திகழும் ஆதாரமும் ஆகும். வட்டத்தின் நடுவே முக்கோணமும் , வட்டத்தின் வெளியே 12 யோக நாடிகளைக் கொண்டதாகவும், 

அக்ஷர (க,க2,க3,க4, ங ,ச1,ச2, ஜ3,ஜ4, ஞ,ட1,ட2) தளங்களை உடையதாகவும் உள்ளது.

Thursday, June 25, 2009

மணிபூரகம்

மணிபூரகம் 
  'தொப்புள்' என்றும் 'நாபி' என்றும் குறிக்கப்படும் கேந்திரம் முழுவதும் பரவி நிற்பதும், முதுகுத்தண்டின் கீழிருந்து மேலாக மூன்றாவது ஆதார இணைப்புபாதையாகும். 

இதன் உருவம் வட்டமும், வட்டத்தினுள் அமைந்த மேல்நோக்கிய இரு கொம்புவடிவ பிறைச்சந்திரன் உருவத்தை கொண்டதாகும். 

வட்டத்தினுள் வெளியே தொட்டபடி பத்து தளங்கள் கொண்ட (இதழ்கள்) ஒவ்வொன்றிலும் (டட, ணத , தத, தந , பப) என்ற பத்து அக்ஷரங்களைக் கொண்டுள்ளது. இதுவே பத்து யோக நாடிகளாய் மிளிருகின்றது. 

ஸ்வாதிஷ்டானம் இரண்டாவது ஆதாரம் (சக்கரம்)

ஸ்வாதிஷ்டானம்
ஸ்வாதிஷ்டானம் என்ற சக்கரம் மூலாதாரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது சக்கரமாகும். 

சுவாசம் என்ற பிராணனின் இருப்பிடம் குண்டலினியின் பிராண வடிவில் 
தன் சக்திகள் இங்கே கேந்த்ரமாக தன்னை வியாபித்துக் கொண்டிருக்கும் குறி ஸ்தானமாகும். 

இதன் உருவம் சதுரம் ஆகும். 

சதுரத்தை தன்னுள் அடக்கி வெளிவட்டமாகவும், வட்டத்தை ஒட்டியவாறு சுற்றிலும் ஆறு இதழ்களை கொண்டதாக உள்ளது. 

இந்த ஆறு இதழ்களிலும் ஸ , ஹ , ம், ய, ர, ல என்ற ஆறு எழுத்துக்களும் 
ஆறு தளங்களாக , ஆறு யோக நாடிகளாக மையம் கொண்டுள்ளது.

பஞ்சாக்ஷரத்தின் முதல் எழுத்தான "ந" எழுத்தின் சப்த பரிமாண எழுச்சி உடையதாகவும் , ரம் என்ற பீஜாக்ஷர அக்னி ரூபமாகவும் திகழுமிடமாகும்

Wednesday, June 24, 2009

ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள் (மூலாதாரம்)

ஏழு ஆதாரங்கள்  

ஆதாரம் என்பது நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் ஆகும் . இவை ஏழு இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். 





படித்த இடம் :http://www.maharishipathanjali.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

0 comments

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates