Followers

Powered by Blogger.

ஜோதிட உலகத்தில் இருக்கும் கால புருஷனின் மிகவும் முக்கியமான பாவமாகிய "மேஷம்" என்ற பாவத்தைப் பற்றிய மிக முக்கியமான தகவல்கள். ★நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து மேஷம் என்ற பாவம் எத்தனையாவது பாவமாக வருகின்றதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்கள் என்றுமே நமக்கு பயன்படாது.அடுத்தவர்களுக்கு தான் அந்த பாவம் சார்ந்த விஷயங்கள் பயன்படும். ★ஒரு மனிதனால் மேஷம் என்ற பாவம் சார்ந்த விஷயங்களை எப்போதுமே அனுபவிக்க முடியாது. ★நமது ஜாதகத்தில் இருக்கும் 12 பாவங்களில் மேஷம் என்ற பாவம் சார்ந்த விஷயங்களை மட்டும் நம்மால் அனுபவிக்க முடியாது. அந்தப் பாவத்திலிருந்து நாம் எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது. ★மீறி அந்த பாவம் சார்ந்த உறவுகள் சார்ந்தும் அல்லது அந்தப் பாவம் சார்ந்த ஆதிபத்தியங்கள் சார்ந்தும் நாம் எதிர்பார்ப்பது வைத்துக் கொண்டால் நமக்கு பிரச்சனை தான் ஏற்படும். ★ஏன் மேஷம் பாவம் சார்ந்த விஷயங்கள் நமக்கு பயன்படாது என்றால் அது இந்த பிரபஞ்சத்தின் கால புருஷனின் முதல் பாவமாகும். அதுதான் கால புருஷனின் லக்னமாகும்.லக்னம் என்பது நம்மை குறிக்கும்.நம்மில் இருந்து அதாவது நமது லக்னத்தில் இருந்து மற்ற பதினோரு பாவங்களைத் தான் நம்மால் பயன்படுத்த முடியும். ★மற்ற பாவங்களை போல் லக்னத்திற்கு எந்த ஒரு ஆதிபத்தியங்களும் கிடையாது. அதாவது இரண்டாம் பாவம் என்பது வருமானம் வாக்கு ஸ்தானம் மூன்றாம் பாவம் என்பது இளைய சகோதரர்கள் நெருங்கின நண்பர்கள் நான்காம் பாவம் என்பது வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு,இதேபோல் மற்ற பாவங்களுக்கு ஆதிபத்தியங்கள் இருக்கின்றது ஆனால் மேஷம் என்ற பாவத்திற்கு எந்த ஒரு ஆதிபத்யமும் கிடையாது அதனால் தான் நம்மால் மேஷம் என்ற பாவம் சார்ந்த விஷயங்களை அனுபவிக்க முடியாது அனுபவிக்க நினைத்தாலும் அது நமக்கு கிடைக்காது. ★இப்பொழுது ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் மேஷம் பாவத்தை பொருத்தி அவர்களின் வாழ்நாளில் எது அவர்களுக்கு பயன்படாது என்பதையும் எதனை அனுபவிக்க முடியாது என்பதையும் ஒவ்வொரு லக்னமாக பார்க்கலாம். ★1.(மேஷ லக்னம்) ★மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவர்களின் வாழ்நாளில் என்றைக்குமே இவர்களின் அறிவு ,ஆற்றல், வேகம் உத்வேகம்,உழைப்பு, சிந்தனை எதுவுமே இவர்களுக்கு பயன்படாது அடுத்தவர்களுக்கு தான் பயன்படும். ★எவ்வளவுதான் அறிவும் ஆற்றலும் இவர்களுக்கு இருந்தாலும் அது என்றைக்குமே இவர்களுக்கும் இவர்களின் சுயநலத்திற்காகவும் அது என்றைக்குமே பயன்படாது. ★அடுத்தவர்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். ★மேஷ லக்னக்காரர்களால் நிறைய பேர் அவர்களின் வாழ்க்கையில் முன்னேறி இருப்பார்கள் ஆனால் இவர்களிடம் இருந்து உதவிகளை மற்றவர்கள் பெற்றுக் கொண்டு கடைசியில் இவர்களை கழட்டி விட்டு விடுவார்கள். ★2.(ரிஷப லக்னம்) ★ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்றைக்குமே இவர்களால் சுகபோக வாழ்க்கை அயன, சயன,போகம் நிம்மதியான தூக்கம்,காமம் சார்ந்த விஷயங்கள் இது அனைத்தும் என்றைக்குமே இவர்களால் அனுபவிக்கவே முடியாது. ★இவர்களுக்கு என்றைக்குமே வெளிநாட்டு வாழ்க்கை ஒத்து வராது. வெளிநாடு சென்றார்கள் என்றால் எப்படி சென்றார்களோ அப்படித்தான் மறுபடியும் வருவார்களே தவிர முன்னேற்றம் என்பதே இவர்களுக்கு இருக்காது. ★ரிஷப லக்னக்காரர்கள் மேற்படிப்பு படிப்பதற்காகவும், வெளிநாட்டில் வேலை செய்வதற்காகவும் சென்றார்கள் என்றால் அந்த விஷயங்கள் இவர்களுக்கு பயன்படாமல் போய்விடும் படித்த மேற்படிப்பு அந்தப் பட்டம்(degree) இவர்களுக்கு பயன்படாது. ரிஷப லக்னக்காரர்கள் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். ★மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ரிஷப லக்னக்காரர்களுக்கு என்றைக்குமே பயன்படாது. இவர்கள் என்றைக்குமே மருத்துவமனையில் admit ஆகி சிகிச்சை பெறக் கூடாது. ஏனென்றால் அந்த சிகிச்சை இவர்களுக்கு பயன்படாமல் போய்விடும் பிறகு இவர்களுக்கு பிரச்சனைகள் தான் ஏற்படும். ★ரிஷப லக்னக்காரர்கள் என்றைக்குமே மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற வேண்டாம்.வெறும் மருத்துவரிடம் ஆலோசனை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். ★3.(மிதுன லக்னம்) ★மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்றைக்குமே இவர்களின் மூத்த சகோதரர் மூலமாகவும் சித்தப்பா மூலமாகவும் எந்த பயனும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது எந்த உதவியும் இருக்காது. ★மூத்த சகோதரர் மற்றும் சித்தப்பா இவர்களுக்கு என்னதான் இவர்கள் உதவி செய்தாலும் இவர்களுக்கு ஒரு உதவி வேண்டும் போது அவர்களால் இவர்களுக்கு உதவ முடியாது. ★4.(கடக லக்னம்) ★கடக லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்குமே இவர்களால் தொழில் மூலம் வரும் வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக அந்தப் பணத்தை அனுபவிக்கவே முடியாது அடுத்தவர்களுக்கு தான் அந்த பணம் பயன்படும். ★தொழிலை இவர்கள் என்றைக்குமே இவர்களின் பெயரில் ஆரம்பிக்கக்கூடாது இவரின் பெயரில் தொழில் செய்தார்கள் என்றால் நஷ்டத்தில் தான் போய் முடியும். ★கடக லக்னக்காரர்கள் என்றைக்குமே அடுத்தவர்களின் தொழிலை பார்த்துக்கொள்ளும் வேலை தான் இவர்களுக்கு ஒத்து வரும். ★5.(சிம்ம லக்னம்) ★சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை, தந்தை வழி குடும்பம், தந்தை வழி சொத்து, தந்தைவழி உறவினர்கள் மூலமாக எந்தப் பயனும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது எந்த உதவியும் இருக்காது. ★தந்தை மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள் பயன்கள் இவர்களுக்கு இருக்கவே இருக்காது. ★சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஒத்துவராது இவர்கள் வெளிநாடு சென்றார்கள் என்றால் எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்தாலும் இவர்களுக்கு முன்னேற்றம் என்பதே இருக்காது. எந்த நிலையில் வெளிநாடு சென்றார்களோ அதே நிலையில் தான் இவர்கள் வீடு திரும்புவார்கள் முன்னேற்றமே இருக்காது ★6.(கன்னி லக்னம்) ★கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு PF pension, Life Insurance ,retirement Life Insurance, Health Insurance இவற்றின் மூலம் இவர்கள் சேமிக்கும் பணத்தை இவர்களால் அனுபவிக்கவே முடியாது. ★ அதாவது இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக அந்த பணத்தை இவர்களால் அனுபவிக்கவே முடியாது அடுத்தவர்களுக்கு தான் அந்த பணம் பயன்படும். ★கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் PF pension, Life Insurance ,retirement Life Insurance, Health Insurance இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் என்றைக்குமே முதலீடு செய்யக்கூடாது செய்தார்கள் என்றால் இவர்களுக்கு அந்த பணம் பயன்படாது. ★7.(துலாம் லக்னம்) ★துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மனைவி மற்றும் மனைவியின் குடும்ப உறவினர்கள் மூலமாக எந்தப் பயனும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது எந்த உதவியும் இருக்காது. ★இவர்கள் மனைவியிடமும் மனைவியின் குடும்ப உறவினர்களிடமும் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ள கூடாது மீறி வைத்துக் கொண்டார்கள் என்றால் இவர்கள் நினைப்பது அவர்களிடமிருந்து வராது. ★இதே பெண்ணாக இருந்தால் கணவன் குடும்பம் மூலமாக இது போன்று இருக்கும். ★துலாம் லக்னக்காரர்கள் என்றைக்குமே இவர்கள் வாழ்நாளில் கூட்டுத் தொழில்(partnership business) செய்யவே கூடாது மீறி செய்தார்கள் என்றால் நஷ்டத்தில் தான் போய் முடியும். ★8.(விருச்சிக லக்னம்) ★விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்குமே இவர்களின் வாழ்நாளில் கடன் வாங்கவே கூடாது கடன் வாங்கினார்கள் என்றால் அந்த கடனை அடைப்பதற்கு இவர்கள் படாதபாடுபட்டு விடுவார்கள் அல்லது அந்த கடனை அடைக்கவே முடியாமல் போய்விடும். ★அதேபோன்று கடன் இவர்கள் யாருக்கும் கொடுக்கவும் கூடாது மீறி கொடுத்தார்கள் என்றால் அந்தக் கடன் இவர்களுக்கு திரும்ப வராது. விருச்சிக லக்னகாரர்கள் கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ★வம்பு வழக்கு அடிதடி சண்டை போன்ற விஷயங்களில் இவர்கள் என்றைக்குமே சமாதானமாகப் போய் விடவேண்டும் .ஏனென்றால் கோர்ட் கேஸ் இவற்றில் இவர்கள் செல்லும்போது என்றைக்குமே தீர்ப்பு இவர்களுக்கு சாதகமாக வரவே வராது. ★மேலும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உத்தியோகம் ஒத்து(set) வராது.ஏனென்றால் உத்தியோகத்தில் மூலம் இவர்கள் சம்பாதிக்கும் வருமானம் என்றைக்குமே இவர்களுக்கு பயன்படாது அடுத்தவர்களுக்கு தான் பயன்படும். ★9.(தனுசு லக்னம்) ★ தனுசு லக்னகாரர்களுக்கு தங்களுடைய தாத்தா சொத்தை அனுபவிக்கும் கொடுப்பினை இவர்களுக்குக் கிடையாது மேலும் தன்னுடைய மூத்த குழந்தையிடம் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இவர்கள் வைத்துக்கொள்ள வேண்டாம். ★அதாவது பூர்வீக சொத்தை அனுபவிக்கும் கொடுப்பினை தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கிடையாது மேலும் இவர்கள் தன்னுடைய மூத்த குழந்தையிடம் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் இருக்கும் வரை இவர்களின் உறவு நன்றாக இருக்கும். ★share market, stock market ,trading இது சார்ந்த விஷயங்களில் தனுசு லக்ன காரர்கள் என்றைக்குமே முதலீடு செய்யவே கூடாது மீறி செய்தார்கள் என்றால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ★10.(மகர லக்னம்) ★ மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் தங்களுடைய தாய் தாய்வழி உறவுகள் தாய் வழி குடும்பத்தினர் இவர்களின் மூலம் இவர்களுக்கு எந்த பயனும் கிடையாது எந்த உதவியும் இவர்களுக்கு கிடையாது. ★மகர ராசி மகர லக்னத்தில் பிறந்தவர்கள் எல்லாம் தாய் தாய்வழி உறவினர்களை சார்ந்து இவர்கள் இருக்க வேண்டாம்.இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தாய் தாய்வழி உறவுகள் மூலம் இவர்களுக்கு எந்த உதவியும் வராது. ★மேலும் இவர்களுக்கு வீடு, வண்டி வாகனம், சொத்து, property, தாய்வழி சொத்து இவற்றை அனுபவிக்கும் கொடுப்பினை மகர ராசி மகர லக்னகாரர்களுக்கு கிடையவே கிடையாது. ★மகர ராசி மகர லக்ன காரர்கள் என்றைக்குமே வீடு வண்டி வாகனம் சொத்து property இவை அனைத்தும் இவர்களின் பெயரில் என்றைக்குமே வாங்கவே கூடாது மீறி வாங்கினால் அந்த சொத்தை இவர்களால் அனுபவிக்க முடியாது. ★இவர்கள் பெயரில் சொத்து இருந்து அதனை விற்றாலும் அந்த பணத்தை இவர்களின் தேவைக்காக இவர்களின் சுய நலத்திற்காக அனுபவிக்க முடியாமல் போய்விடும். மேலும் தேவையில்லாத பிரச்சினைகளில் ஏற்பட்டுவிடும். ★வீடு,சொத்து இவர்கள் பெயரில் இருக்கக்கூடாது மேலும் இவர்கள் பெயரில் வாங்கவும் கூடாது. ★11.(கும்ப லக்னம்) ★கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் மூலமாக எந்த பயனும் இருக்காது எந்த உதவியும் இருக்காது எந்த ஆதாயமும் இருக்காது. ★மேலும் இவர்கள் இளைய சகோதரர்கள் நெருங்கிய நண்பர்கள் இவர்களிடமிருந்து எந்த ஒரு ஆதாயமும் எதிர்பார்க்கக்கூடாது ஏதாவது எதிர் பார்த்தார்கள் என்றால் அது இவர்களுக்கு வராது. ★12.(மீன லக்னம்) ★மீன லக்னத்தில் பிறந்தவர்கள் என்றைக்குமே இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை இவர்களுக்காக அனுபவிக்க முடியாது. .★அதாவது இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை தனக்காக என்றைக்குமே அனுபவிக்கவே முடியாது. ★இவர்களுக்கு என்று எதுவும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ★ஒன்று குடும்பத்திற்காகவோ உறவினர்களுக்காகவோ அல்லது நண்பர்களுக்கோ அந்தப் பணத்தை செலவு செய்து விடுவார்கள். ★இவர்கள் கையில் பணம் வந்தால் அந்த பணத்திற்கு வேட்டு வைக்க ஒரு விஷயம் காத்துக் கொண்டிருக்கும். ★வாழ்நாள் முழுவதும் இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. ★(மேற்கொண்ட இந்த சூட்சுமத்தை ஜாதகத்தில் Check செய்து பாருங்கள் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்) ★மேஷம் என்ற பாவத்தில் கிரகங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். ★ஜோதிடம் சார்ந்த ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் மற்றும் ஜாதகம் பார்க்க ஜாதகம் எழுத என்னை தொடர்பு கொள்ளவும். ★Call me My mobile number and WhatsApp number is 8610232640. my name is s.selvakumar. (Vedic astrologer, Numerologer and DNA astrologer).

0 comments

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates