Followers

Powered by Blogger.

ஹோமியோபதி விவசாயம்...

Posted by ss Sunday, December 25, 2016

ஹோமியோபதி விவசாயம்.,3
(முந்தைய கட்டுரையின் செழுமை வடிவம்)
பயிர்களுக்கு வரும் முக்கியமான பேன் போன்ற பூச்சிகள் தான் அவை ஒருமாதிரி பிசுபிசுவென இலைகளை ஆக்கி மாவு போன்ற பொருளை சுரந்து பயிர்த்தண்டை பாழாக்கி விடும். இவற்றுக்கு அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் ஹோமியோபதியில் சிறப்பான நிவாரணிகள் உள்ளன.
ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தும் முறை:
பயிர்களுக்கு தேவையான பொருத்தமான மருந்தை திரவ வடிவில் (DILUTION) அல்லது இனிப்பு உருண்டை வடிவில் (GLOBULES) வாங்கி வைத்துக் கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 5 சொட்டு அல்லது 5 உருண்டைகள் போட்டு நன்றாக கலக்கவும், குச்சியோ அல்லது கரண்டியோ கொண்டு நன்கு ½ மணி நேரம் கலக்கவும். கலக்கியபின் தெளிப்பான் உதவியுடன் பயிர்களுக்கு தெளிக்கலாம்;அல்லது சொட்டுநீர்ப்பாசானமாக இருந்தால் பாசான நீரில் கலந்து விடலாம்.
மருந்து ஒரு முறை தெளித்தால் அல்லது நீரில் பாய்ச்சினால் போதுமானது, பயிரின் நிலைமையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.
பயிரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மீண்டும் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை; முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் மீண்டும் அதன் அறிகுறிகளை உற்று கவனித்து அதற்கு பொருத்தமான மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டி வரலாம்.
பேன் தொல்லையுடன் இலை சுருண்டு போதல்,/பூ சுருண்டு போதல், ஒட்டக்கூடிய வகையான சுரப்புகள் உள்ள நோய்த் தன்மைக்கு சிமிசிபுகா (Cimicifuga) 30 ஓர் அருமையான மருந்து.
பேன் தொல்லையுடன் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட(அதாவது பராமரிக்காமல் அல்லது தண்ணீர் விடாமல் விடப்பட்ட) அல்லது அதிக உரமூட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது தாவரங்களுக்கு நேட்ரம் குளோரேட்டம் (Natrium chloratum) 30 .
பேன் தொல்லையுடன் பலவீனமான குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு சோரினம் (Psorinum) 200 முக்கிய மருந்து
பேன் தொல்லைக்கு மிக முக்கியமான மருந்து அதனுடன் காயங்களாலோ,அடிபட்டதாலோ பலவீனமடைந்த தாவரங்களுக்கு ஸ்டாபிசாக்ரியா Staphysagria 30 அல்லது200

LikeShow more reactions
Comment
.


0 comments

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates