Followers

Powered by Blogger.

ஆங்கில தேதிக்கு கிழமை கண்டுபிடிக்கும் வழி
----------------------------------------------------------------------
ஆங்கில வருடங்களில் எந்த வருடமானாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க ஒரு எளிய வழிமுறை இருக்கிறது . அதை இங்கு விளக்குகிறேன்.
1 வருடத்திற்கு 365 நாட்கள்
1லீப் வருடத்திற்கு 366 நாட்கள்
1 வாரத்திற்கு 7 நாட்கள்
கிழமைகள் 7 நாட்களுக்கு ஒரு முறை திரும்ப திரும்ப சுழற்சியாக வரும். ஆகவே ஒரு வருடத்தின் மொத்த நாட்களான 365 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
365/7 = ஈவு 52 மீதி 1
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
(1)ஒரு வருடத்திற்கு மீதம் -1 நாள்
(2)100 வருடத்திற்கு மீதம் – 100 நாள்
(100*1=100)
(3) 100 வருடங்களில் 24 லீப் வருடங்கள் வரும். லீப் வருடங்களில் வரும் அதிக நாட்கள் -24 நாட்கள்
(1)+(2)+(3) = 1+100+24= 124 நாட்கள்
இந்த 124ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
124/7= ஈவு 17 மீதி 5
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
எனவே
(அ) 100 வருடங்களுக்கு மீதம் – 5 நாட்கள்
(ஆ) 400 வருடங்களிக்கு மீதம் (4*5=20) – 20 நாட்கள்
(இ) 400 வது வருடம் லீப் வருடமாகும் ஆகவே அதிக நாட்கள் – 1 நாள்
(100 வது, 200வது, 300வது வருடங்கள் லீப் வருடங்கள் இல்லை)
(ஆ)+(இ) = 20+1=21 நாட்கள்
இந்த 21 ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
21/7= ஈவு 3 மீதம் 0
ஞாபகத்தில் வைக்க வேண்டியது
100 வருடங்களுக்கு மீதம்- 5 நாட்கள்
400 வருடங்களுக்கு மீதம்- 0 நாட்கள்
எந்த வருடத்தில் எந்த தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த வருடத்திற்கு முந்தைய வருடதிற்கான மீத நாட்களை கண்க்கிட்டுக்கொண்டால் தேவையான ஆண்டில் வரும் தேதிக்கு கிழமையை கண்டு பிடிக்கலாம்.
உதாரணமாக 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
முதலில் 1968 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 1967 க்கு மீத நாட்கள் எத்தனை என்று பார்ப்போம்.
1967 கீழ் கண்டவாறு பிரித்து எழுதிக்கொள்ள வேண்டும்
(க)1600 (4*400=1600) வருடங்களுக்கு மீதம் – 4*0 = 0 நாட்கள்
(கா) 300 (3*100 = 300) வருடங்களுக்கு மீதம் – 3*5 = 15 நாட்கள்
(கி) 67 வருடங்களுக்கு மீதம் – 67 நாட்கள்
(கீ) 1900 முதல் 1967 வரை 16 லீப் வருடங்கள் வருகின்றன ,எனவே இந்த 16 லீப் வருடங்களுக்கு அதிக நாட்கள் – 16 நாட்கள்
(க)+(கா)+(கி)+(கு) = 0+15+67+16 =98
98 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
98/7= ஈவு 14 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
(ச) 1967 ஆம் ஆண்டின் மீதம் – 0 நாட்கள்
(சா) 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் – 31 நாட்கள்
(சி) 1968 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் – 29 நாட்கள்
(1968 லீப் ஆண்டு)
(சீ) 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் – 31 நாட்கள்
(சு) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் – 30 நாட்கள்
(சூ) 1968 ஆம் ஆண்டு மே மாதம் – 31 நாட்கள்
(செ) 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் – 30 நாட்கள்
(சே) 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை- 28 நாட்கள்
(ச)+(சா)+(சி)+(சீ)+(சு)+(சூ)+(செ)+(சே) = 0+31+29+31+30+31+30+28 = 210
இந்த 210 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்
210/7 = ஈவு 30 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
மீதி 0 வந்தால் ஞாயிற்றுக்கிழமை
மீதி 1 வந்தால் திங்கள் கிழமை
மீதி 2 வந்தால் செவ்வாய்க்கிழமை
மீதி 3 வந்தால் புதன் கிழமை
மீதி 4 வந்தால் வியாழக்கிழமை
மீதி 5 வந்தால் வெள்ளிக்கிழமை
மீதி 6 வந்தால் சனிக்கிழமை
நாம் உதாரணமாக எடுத்துக்கொண்ட 28-07-1968 அன்று மீதி 0 வருவதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாகும். இவ்வாறு எந்த வருடத்தில் உள்ள தேதியானாலும் கிழமை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.

0 comments

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates