Followers

Powered by Blogger.

கிரக சேர்க்கைகளும் மலர் மருந்துகளும்.
--------------------------------------------------------------
குரு+சூரியன்
------------------
ஜாதகத்தில் குரு+சூரியன் சேர்க்கை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளிகளாக இருப்பார்கள். தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள். இந்த ஏமாளிகளுக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.
குரு+சந்திரன்
------------------
ஜாதகத்தில் குரு+சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் எப்பொழுதும் மனக்குழப்பத்திலேயே இருப்பர். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து ”ஸ்கிளராந்தஸ்” ஆகும்.
குரு+செவ்வாய்
---------------------
ஜாதகத்தில் குரு+செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரிகளாகும். இவர்களுக்கேற்ற மலர் மருந்து “வைன்”.
குரு+புதன்
---------------
ஜாதகத்தில் குரு+புதன் சேர்க்கை பெற்றவர்கள் எப்பொழுதும் யாருக்காவது உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து “பைன்”.
குரு+சுக்கிரன்
------------------
ஜாதகத்தில் குரு+சுக்கிரன் சேர்க்கை பெற்றவர்கள் எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர்கள். இவர்கள் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர்கள். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார்கள். இவர்களின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “கிராப் ஆப்பிள்”.
குரு+சனி
------------------
ஜாதகத்தில் குரு+சனி சேர்க்கை பெற்றவர்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுபாட்டை கடைபிடிப்பார்கள். பெரியவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவார்கள். அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். இத்தகையோருக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து “பீச்”.
குரு+ராகு
---------------
ஜாதகத்தில் குரு+ராகு சேர்க்கை பெற்றவர்கள் இயற்கை சீற்றங்களைகண்டும், மற்றவர்களின் மிரட்டல்களைக்கண்டும் பீதியடைவார்கள். சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பீதியடைவார்கள். இவர்களைத்தேற்ற கொடுக்கவேண்டிய மலர் மருந்து “ராக்ரோஸ்”.
குரு+கேது
---------------
ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை பெற்றவர்கள் எந்த துயரம் வந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கமாட்டார்கள். ஏன் இறைவனைக்கூட அழைக்கமாட்டார்கள். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து “ஸ்வீட் செஸ்ட்நட்” ஆகும்.
\
படித்த இடம் :https://www.facebook.com/ravi.sankaran1?fref=nf

0 comments

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates