Followers

Powered by Blogger.

கர்பத்தை காக்கும் கர்ப்பரட்சாம்பிகை தாய் 

 

இன்றைய காலங்களில் திருமணமாகி பல்வேறு காரணங்களால் குழந்தை பாக்கியமில்லாமல் பலரும் தவிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும்  வரபிரசாதமாக  உள்ளவர் தஞ்சை அருகே உள்ள திருக்கருக்கவூர் என்னும் இடத்தில குடிகொண்டிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை அல்லது முல்லைவனநாயகி என்னும் பார்வதிதேவி தன்னை நாடி வரும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அவர்களுடைய கர்பத்தை காத்து குழந்தை பேறு அளிகின்றார்.
இக்கோயிலுக்கு ஒருமுறை வந்து இவம்மனை மனதார வேண்டிக்கொண்டு வேண்டுதலை வைத்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என வேண்டுதல் நிறைவேறி குழந்தையுடன் வரும் தம்பதியரின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது.
இங்கு குழந்தை பாக்கியம் வேண்டிவரும் தம்பதியர் அன்னையின் சன்னதியில் நெய்யினால் படிமொழுகி கோலமிட்டு பிரார்த்தனை செய்துகொண்டு அம்பாளை வேண்டிக்கொண்டு தரப்படும் வெள்ளியினால் ஆன ஸ்கந்தர் உருவத்தினை தனது முந்தானையில் பெற்று தங்க தொட்டிலில் இட்டு கணவன் மனைவி இருவரும் அம்பாள் சன்னதியை ஒருமுறை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்   அம்பிகையின் திருப்பாதங்களில் வைத்து தரப்பட்ட அந்நெய்யினை வேண்டிக பெற்று கொண்டு 48 நாட்கள் அந்த நெய்யினை விரத முறைப்படி உண்டுவர நிச்சயம் பிள்ளை பாக்கியம் உண்டாகும்.
                                                           தங்க தொட்டில்
இவ்வாறு விரதமிருந்து பெற்ற குழந்தையை  பிரார்த்தனையின்படி
தம்பதியர் குழந்தையுடன் வந்து குழந்தையினை தங்க தொட்டிலில்
இட்டு தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளவேண்டும்.சில தம்பதியினர் துலாபர வேண்டுதளையும் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
இக்கோவிலில் திருமணம் பாக்கியம் தடைபடுபவர்களுக்கு திருமண பாக்கியம் பெற அம்பிகை சன்னதியில் நெய்யினால் படிமொழுகி பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.
இத்தலத்தில் செம்மேனிநாதனாகிய முல்லைவனநாதர் கங்கையாகவும்,
கருகாத்த  நாயகி யமுனையகவும், இரு ஆலயங்களுக்கு இடையில் குமார பரமேஸ்வரனாகிய சுப்ரமணியர் சரஸ்வதியாகவும் விளங்கி திருவேணி சங்கமத்தை ஒத்து சோமாஸ்கந்த சொருபமாய் விளங்குகிறார்கள்.எனவே மூவரையும் மூன்று முறை  வேண்டி வணங்கி வலம்வந்தால்    திருவேணிசங்கமத்தில் நீராடிய புண்ணியமும் காசியில் வழிபட்ட புண்ணியமும் ஏற்பட்டு திருமணம் கைகூடுதல்,மக்கட் பேறு மற்றும் சகல பேறுகளும் கிட்டும் எனவே இத்தலத்தை மும்முறை வலம் வந்து சகல பேறுகளையும் பெருக.

முல்லை வனநாதர் சன்னதி


இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து சுமார் 20 km தூரத்தில் உள்ள திருக்கருக்காவூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.இதற்கு பேருந்து வழித்தடங்கள் 16,34 & 44 .கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது இங்கிருந்து பேருந்து வழித்தடம் எண்: 11 & 29. இவ்இருஊரிலிருந்தும் திருக்கருக்காவூர் அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும்.


கோயில் கோபுரம்
 
தீர்த்த குளம்
 
 குழந்தை பேறு இன்றி தவிக்கும் அனைவருக்காகவும்     இப்பதிவினை தந்துள்ளேன்.முடிந்தவரை குழந்தை இல்லாது தவிக்கும் அனைவரிடமும் இத்தகவலை தெரிவிக்கலாமே.

 படித்த யிடம் :http://aannmegam.blogspot.in/2012/08/blog-post_2.html

0 comments

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates