Followers

Powered by Blogger.

அண்ணாமலையில் நாம் எந்த நாளிலும்,எந்த நேரத்திலும்,எந்த சூழ்நிலையிலும் கிரிவலம் செல்லலாம்;அப்படி நாம் செல்லும்போது, நம்முடன் நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் கிரிவலம் வரும்= இந்த தெய்வீக உண்மையை நமக்குக் கண்டறிந்து சொன்னவர் சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்.அகத்தியரின் இந்த தெய்வ வாக்கினை தொகுத்து ஸ்ரீஅகஸ்திய விஜயம் என்னும் மாத இதழ் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்.அவ்வாறு கிரிவலம் செல்லும்போது,ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.வசதியிருந்தால் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்;

இவ்வாறு 14 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்தால் அதனால் நமது கடுமையான கர்மவினைகள் தீரும்.கிரிவலம் முடித்த பின்னர்,கட்டாயமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்.(கிரிவலம் புறப்படும்போது, அண்ணாமலையாரை கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டியதில்லை;)(நள்ளிரவில் கிரிவலம் முடித்தவர்கள்,மறு நாள் காலையில் அண்ணாமலையாரை தரிசிக்கவேண்டும்)


இப்படி மாதம் ஒருமுறை வீதம் குறைந்தது 1 ஆண்டு வரையிலும்,அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும் அண்ணாமலையில் அன்னதானம் செய்து கொண்டே கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படி கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்ததன் மூலமாக எனக்கு பலவிதமான பிரச்னைகள் முழுமையாக தீர்ந்திருக்கின்றன; என்னைப் பொறுத்த வரையில்,நான் பெரும்பாலும் பவுர்ணமி நாட்களில் அண்ணாமலைக்குச் செல்வதில்லை;திருவாதிரை நட்சத்திரம் நின்ற நாள் அல்லது துவாதசி திதி அல்லது அமாவாசை அல்லது மாத சிவராத்திரி அல்லது எனது ஜன்ம நட்சத்திரம் நிற்கும் நாள் அல்லது ஏதாவது ஒரு சனி/ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறு 26.6.2009 முதல் 21.12.2011 வரையிலான கால கட்டத்தில் தொடர்ந்து செய்து வந்திருக்கிறேன்.


(குறிப்பாக அன்னதானத்துடன் கூடிய கிரிவலம் செல்வதை ஒரு தமிழ் வருடத்தில் மூன்று அமாவாசைகளில் செய்வதை வழக்கமாக்கியிருக்கிறேன்.ஆடிஅமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளுமே அதி முக்கியத்துவம் வாய்ந்தவை;முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய கடலோரம் அல்லது நதிக்கரையோரம் செல்ல வேண்டும் என்பது இந்து சாஸ்திர  விதியாக இருக்கிறது.அண்ணாமலையானது சோண நதியின் மீது அமைந்திருக்கிறதே! எல்லாம் எனது அப்பா அருணாச்சலத்தின் ஆசிர்வாதத்தால் இவ்வாறு செய்ய முடிந்திருக்கிறது.நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாமே!!!)


பல்வேறு காரணங்களால்,நாம் கோபம்,பொறாமை,திமிர்,அகங்காரம்,செல்வச்செருக்கு போன்றவற்றினால் பல பிறவிகளிலும்,இந்த பிறவியிலும் ஆடாத ஆட்டம் ஆடியிருப்போம்;அவை அனைத்தும் இவ்வாறு 3 ஆண்டுகள் வரையிலும் அன்னதானம் + ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் செல்லுதல் மூலமாக அனைத்துக் கர்மவினைகளும் தீர்ந்துவிடும்.


இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு தடவையும் இவ்வாறு செய்ய செய்ய நாம் நமது சிந்தனை,செயல்,அணுகுமுறை என அனைத்தும் மாறியிருக்கும்.


இந்த ஆன்மீகவழிமுறையை எனக்கு போதித்த ஆன்மீக ஆராய்ச்சியாளர்  சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுள்கால சீடர் சிவமாரியப்பன் அவர்களுக்கும்,நமக்கு போதித்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கும் கோடி கோடி கோடி நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்
 
படித்த  இடம் :  http://omshivashivaom.blogspot.in/2012/01/blog-post.html

1 Responses to சாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபமும்

  1. Unknown Says:
  2. Should follow

     

Post a Comment

Blog Archive

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates